வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

சினிமாவில் சாதிக்க போராடிய சமுத்திரக்கனி.. வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்ட பிரபலம்

தமிழ் சினிமாவில் இன்று ஒரு நடிகராக, இயக்குனராக, சிறந்த கலைஞராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளவர் சமுத்திரகனி. இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு சின்னத்திரையில் செல்வி, அண்ணி உள்ளிட்ட பல சீரியல்களை இயக்கியுள்ளார்.

அதன்பிறகு அவர் வெங்கட் பிரபு, எஸ்பிபி சரண் இணைந்து நடித்த உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தின் சிறந்த கதைக்காக அவர் தமிழக அரசின் விருதையும் பெற்றார். ஆனால் இந்தப் படத்திற்கு பிறகு அவருக்கு பெரிய திரையில் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்று அவர் கடுமையாக போராடி வந்தார். அந்த சமயத்தில் தான் கேப்டன் விஜயகாந்த், சமுத்திரகனியை கூப்பிட்டு ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்தார். அப்படி அவர் விஜயகாந்தை வைத்து இயக்கிய திரைப்படம் தான் நெறஞ்ச மனசு.

விஜயகாந்தின் மாறுபட்ட நடிப்பில், கிராமத்து பின்னணியைக் கொண்ட இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு சமுத்திரகனி நாடோடிகள் உட்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கி இன்று ஒரு முன்னணி இயக்குனராக இருக்கிறார்.

அவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் சில படங்களை இயக்கியுள்ளார். அவர் இன்று இவ்வளவு பிரபலமாக இருப்பதற்கு முக்கிய காரணம் கேப்டன் விஜயகாந்த். அன்று அவர் கொடுத்த வாய்ப்புக்கு பிறகுதான் அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு பிரேக் கிடைத்தது.

மேலும் கேப்டன் சினிமாவில் யாராவது கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்று கேள்வி பட்டால் உடனே அவருக்கு தேடிப்போய் உதவி செய்யும் குணமுடையவர். சமுத்திரை கனியைப் போன்று பலருக்கும் கேப்டன் விஜயகாந்த் பல வாய்ப்புகளை கொடுத்துள்ளார். அதனால்தான் இன்றும் சினிமா கலைஞர்கள் மத்தியில் அவருக்கு ஒரு மதிப்பு இருக்கிறது.

Trending News