திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எவ்வளவு பட்டாலும் திருந்தாத சமுத்திரக்கனி.. அக்கட தேசத்தில் மீண்டும் மீண்டும் அசிங்கப்படும் பரிதாபம்

பொதுவாக சமுத்திரக்கனி எந்த அளவுக்கு இயக்குனராக அனைவருக்கும் பரிச்சயம் ஆயிருக்காறோ அதைவிட ஒரு நடிகராகவும், வில்லனாகவும் இவருடைய எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார். அத்துடன் இவர் நடிக்கும் எந்த ஒரு கதாபாத்திரத்திலும் இவருக்கென்று ஒரு தனித்துவமான நடிப்பை காட்டி அதில் இவருடைய முத்திரையை பதித்து விடுவார்.

அதே போல் இவர் தமிழில் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் வாண்டட் கேரக்டரில் இவரை தேடி வருபவர்கள் ஏராளமானவர். எல்லாம் மொழிகளிலும் இருந்து இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என்று இவரை போட்டி போட்டு நடிப்பதற்கு அழைக்கிறார்கள். அந்த அளவிற்கு இவருடைய நடிப்பை கச்சிதமாக செய்யக் கூடியவர்.

Also read: விடுதலை பட தமிழரசியா இது.. அடையாளமே தெரியாத கிளாமர் உடையில் வெளியான புகைப்படம்

அப்படிதான் இவரை அக்கடதத்தில் நடிக்க கூப்பிட்டார்கள். இவரும் அவர்களை நம்பி அங்கு நடிக்க சென்றார். அதேபோல் இவருடைய வேலையை சிறப்பாக செய்து நடித்துக் கொடுத்தார். ஆனால் அங்கே இவருக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரம் அந்த அளவிற்கு சிறப்பாக அமையவில்லை. ஏதோ உப்புக்கு சப்பான நடிகர் போல அவரை பிற மொழிகளில் பயன்படுத்துகிறார்கள்.

இன்னும் சொல்லப் போனால் இவரை பெருசாக பொருட்படுத்தாமல் இவரை கூப்பிட்டு அவமானப்படுத்தும் விதமாக சில விஷயங்கள் இவருக்கு நடக்கிறது. ஆனாலும் இதை கண்டு காணாமல் யாராவது கூப்பிட்டால் நடிக்கப் போய் விடுகிறார். எத்தனை முறை பட்டாலும் திருந்தவே இல்லை. இவருடைய வேலையை போய் போய் அவமானப்படுவதுதான் அந்த அளவிற்கு இவரை பயன்படுத்துகிறார்கள்.

Also read: டாப் ஹீரோக்களுக்கு தண்ணி காட்டும் கமல்.. கதி கலங்கி போக வைத்த சம்பவம்

சமீபத்தில் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் படத்திலும், தசரா படத்திலும் இவருடைய கதாபாத்திரம் எந்த அளவுக்கு இருந்தது என்று நம் கண்கூடாகவே பார்த்தோம். அப்படி இருந்தும் ஏன் அங்கு போய் இவர் மறுபடியும் நடிக்க வேண்டும் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. இவருடைய நடிப்பு திறமைக்கு இங்கேயே பட வாய்ப்புகள் இருக்கும் பொழுது இதை விட்டு ஏன் அக்கடதேசத்தில் ஆர்வம் காட்டுகிறார்.

இவர் அங்கே போய் நடித்த இரண்டு படங்களுமே இவருக்கு சொல்லும் படியான கதாபாத்திரங்கள் கொடுக்கப்படவில்லை. கடைசியில் அசிங்கப்பட்டு இருப்பது தான் மிச்சம். இவரிடம் திறமை இருந்தும் ஏன் அதை சரியாக பயன்படுத்தாமல் இருக்கிறார். ஆனாலும் இதற்கெல்லாம் இன்னொரு காரணமும் இருக்கிறது அவருக்கு அங்கே கம்மியான கதாபாத்திரம் என்றாலும் இங்கே கிடைக்கிறதை விட அதிக சம்பளம் இருப்பதால் அசிங்கப்பட்டாலும் பரவாயில்லை என்று போய் நடிக்கிறார். ஏன் இப்பொழுது கூட தெலுங்கில் ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.  இதில் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: என்னது வெங்கட் பிரபு கூட்டணியில் விஜய்யா.? ஓவர் ரிஸ்கில் தளபதி-68

Trending News