வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

உதவி செய்யப்போக தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்ட சனம்.. வச்சு சம்பவம் செய்த நெட்டிசன்கள்!

பிக் பாஸ் 4வது சீசனில் பங்கேற்றவர்களில் ஒருவர் தான் சனம் ஷெட்டி. இவர் மாடல் அழகியும் நடிகையுமாவார். அதே போல் பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களின் வெளியேற்றத்தை காட்டிலும் சனம் ஷெட்டியின் வெளியேற்றம் பிக்பாஸ் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதுமட்டுமில்லாமல் சனம் வெளியே வந்த சமயம், ட்விட்டர் பக்கத்தில் சனம் ஷெட்டி ஹேஸ் டேக் ட்ரெண்ட் ஆனது. அந்த அளவிற்கு சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவிடும் சனம் ஷெட்டி, தற்போது அங்காடித்தெரு சிந்துவுக்கு உதவி செய்யுமாறு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஏனென்றால் சிந்து கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக போதிய பணம் இல்லாததால் அவதிப்பட்டுக்  கொண்டிருக்கிறார்.

எனவே சிந்துவுக்கு உதவும் நோக்கத்தில் நிதி திரட்ட சமூகவலைதளங்களில் முடிவு செய்துள்ள சனம் ஷெட்டியை பலரும்  பாராட்டி வந்த நிலையில்,

sanam-twit-cinemapettai

ஒரு ரசிகர் மட்டும் ‘உங்களால் உதவி செய்ய முடியும் தானே, மொத்த தொகையையும் நீங்கள் மட்டுமே கொடுத்து விடலாமே?’ என்ற கேள்வியை எழுப்பி சனம் சட்டியுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்த சனம் ஷெட்டி, ‘நானும் உதவியிருக்கிறேன். அதன் விவரத்தை இங்கே தெரிவிக்கும் அவசியம் இல்லை, முடிந்தால் உதவி செய்யுங்கள்’ என்று கோபத்துடன் பதிலளித்துள்ளார்.

Trending News