பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்ட மீரா மிதுன் சமீபத்தில் ஒரு பட்டியல் இனத்தவரைப்பற்றி அவதூறாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். மீராமிதுனின் இந்த அடாவடி பேச்சு பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக அவர்மீது 7 பிரிவுகளின்கீழ் வழக்கு தொடரப்பட்டு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.
என்னை கைது செய்வதெல்லாம் ஒருபோதும் நடக்காது. அது கனவில் தான் நடக்கும் எனக்கூறி டிமிக்கி கொடுத்துவந்த அவரை ஆகஸ்ட் 14ஆம் தேதி கேரளாவில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். கைதுசெய்தபோது கூட தற்கொலை செய்துகொள்வேன் என காவல்துறையினரைப் பார்த்து மிரட்டியுள்ளார் மீரா மிதுன்.
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்ட சனம் ஷெட்டி மீராவின் கைதிற்கு ஆதரவு தெரிவித்து டுவிட் செய்துள்ளார். அதில் அவர், மீரா மிதுனை கைது செய்து கிரைம் போலீசார் சரியான நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த சில வருடங்களாக நாங்கள் சகித்துக்கொண்டிருந்த வெறுக்கத்தக்க பேச்சுக்கள் இனி முடிவுக்கு வந்துவிடும் என குறிப்பிட்டுள்ளார்.
இதில் என்ன பெருமை இருக்கிறது அந்த அளவிற்கு ஓவர் பில்டப் செய்யாதீர்கள் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அவர் செய்த கீழ்தனமான வேலைக்கு இதுவே தாமதமான கைது என்று பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் மீரா மிதுனின் கைதிற்கு பிரபலங்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நடிகர் விஜய், சூர்யாவைப்பற்றி அவதூறாகப் பேசியது,கொலை மிரட்டல் விடுத்தது, பண மோசடியில் ஈடுபட்டது என பல வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
![sanam-twit](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/08/sanam-twit.jpg)
மீரா மீதுன் ஏற்கனவே 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் புகைப்பிடிக்கும் வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார்.