திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அவமானப்பட்ட சந்தானம்.. பேராசையால் எடுத்த விபரீத முடிவு

தமிழ் சினிமாவில் தன்னுடைய எதார்த்தமான நகைச்சுவையின் மூலம் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் நடிகர் சந்தானம். இவர் நடிக்காத ஹீரோக்களே இல்லை என்னும் அளவுக்கு அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஒரு படத்திற்கு பல லட்சம் சம்பளம் வாங்கி ஜாலியாக இருந்த அவர் திடீரென ஹீரோ அவதாரம் எடுத்தார். இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு போன்ற திரைப்படங்களில் இவர் ஹீரோவாக நடித்துள்ளார்.

அவருடைய காமெடியை ரசித்த ரசிகர்களால் அவரை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அவர் நடித்த படங்கள் அனைத்தும் மக்களிடையே வரவேற்பை பெறத் தவறியது. ஆனாலும் விடாமல் சந்தானம் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும் பாணியில் தொடர்ந்து ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து வருகிறார்.

அவர் இப்படி பிடிவாதமாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணமும் உள்ளது. அதாவது சந்தானம் அரண்மனை, என்றென்றும் புன்னகை போன்ற திரைப் படங்களில் காமெடியனாக நடித்தார். அந்த இரண்டு படங்களிலும் நடிகர் வினய் ஹீரோவாக நடித்திருந்தார்.

அவர் ஹீரோவாக இருந்தாலும் சந்தானத்தை விட குறைவான சம்பளமே அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அதிக சம்பளம் வாங்கும் சந்தானத்துக்கு கேரவன் தராமல் ஹீரோவான வினய்க்கு முதலில் கொடுக்கப்பட்டுள்ளது. இறுதியாகத்தான் சந்தானத்திற்கு கேரவன் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் தன்னை படப்பிடிப்பில் அவமானப்படுத்தி விட்டதாக கருதிய சந்தானம் ஹீரோக்களுக்கு தான் இங்கு மரியாதை கிடைக்கிறது என்று நினைத்துள்ளார். இதன் காரணமாக சந்தானம் இனிமேல் நடித்தால் ஹீரோவாக தான் நடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

இவர் ஹீரோவாக நடித்த படங்கள் அவ்வளவு பிரபலமாகாத நிலையிலும் சந்தானம் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே திரைபடங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடித்த எந்த திரைப்படமும் ஓடாத நிலையில் தற்போது ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற திரைப்படத்தில் சந்தானம் நடித்து வருகிறார்.

santhanam-cinemapettai
santhanam-cinemapettai

Trending News