வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சரவணன் காசை ஆட்டைய போட நினைக்கும் குடும்பம்.. பெருந்தன்மையை காட்டிய சந்தியா

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியல் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் இந்த சீரியலில் படிக்காத கணவனை எப்படி முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வது என்பதை ஐஏஎஸ் ஆக துடிக்கும் படித்த மனைவியின் போராட்டம்தான் இந்த சீரியலின் கதை.

சிறந்த சமையல்காரராக சரவணனை சந்தியா, வெளியூரில் நடந்த சமையல் போட்டியில் கலந்து கொள்ள வைத்து, ரூபாய் 5 லட்சம் பரிசுத் தொகையுடன் ஊர் திரும்பியுள்ளனர். எனவே சரவணன் உடைய 5 லட்சத்தை என்ன செய்ய வேண்டும் என்று குடும்பத்தினர் ஒன்றாகக் கூடி பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, சரவணனை எப்போதுமே மட்டம் தட்டிக் கொண்டிருக்கும் ஆதி அந்த பணத்தில் தனக்கும் ஒரு பங்கு வேண்டும் என்று திமிராக கேட்கிறார். ஆனால் சந்தியா, சரவணனின் ஐந்து லட்சத்தை வைத்து சரவணனின் ஸ்வீட் கடை மற்றும் செந்திலின் ஜவுளி கடையை விரிவுபடுத்த வேண்டும்.

அத்துடன் சரவணனின் தங்கச்சி மீனாவின் கல்யாணத்தை நல்ல முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்குகிறார். எனவே கடையை விரிவுபடுத்தினால் வாடிக்கையாளர்களிடம் அதிக கவனம் பெற்று, கடையில் அதிக வருமானம் வரும் என்பதற்காக சந்தியா சரியான யோசனை கூறி உள்ளார் என்று குடும்பத்தினர் பாராட்டுகின்றனர்.

ஆனால் ஆதி மட்டும் 5 லட்சத்தில் இருந்து ஒரு பைசா கூட தர மாட்டீங்களே என்று கோபப்படுகிறார். மேலும் சமையல் போட்டியில் பல தடங்களை ஏற்படுத்திய அர்ச்சனாவின் மீது எந்த கோபமும் இல்லாமல் அவர்களது ஜவுளி கடையையும் விரிவுபடுத்த  5 லட்சத்தில் இருந்து பணம் ஒதுக்கியது சந்தியா-சரவணனின் பெருந்தன்மையை காட்டியது.

இருப்பினும் சரவணனின் குடும்பத்தில் ஆதி மட்டும் சந்தியாவின் மீது வெறுப்பை காட்டியுள்ளார். பலமுறை சரவணனை சபையில் அவமதித்த ஆதியை சந்தியா சமயம் பார்த்து மூக்கு உடைத்து விட்டார் என்று சீரியல் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

Trending News