திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

எங்கள் வீட்டு பாகுபலி.. முதல் முதலாக குழந்தையை பெயருடன் காட்டிய சாண்டி!

சாண்டி மாஸ்டர் என கூறினால் தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு பிரபலமான நடன இயக்குனர் தான் சாண்டி மாஸ்டர். ஆரம்ப காலகட்டங்களில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடன இயக்குனராக பணியாற்றி வந்தார்.

அதன் பின்னர் தனது திறமையாலும் விடாமுயற்சியாலும் படிப்படியாக முன்னேறி தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். படங்களில் பணியாற்றி வந்த சாண்டி மாஸ்டர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

சக போட்டியாளர்களான தர்ஷன், கவின், முகேனுடன் சேர்ந்து செய்த சேட்டைகள், கலகலப்பான காமெடிகள், பாடல்கள் என ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். சாண்டி மாஸ்டர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார். சாண்டி மற்றும் அவரது மனைவி சில்வியாவிற்கு ஏற்கனவே 3 வயதில் லாலா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சில்வியா இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமாக இருப்பதாக அண்மையில் சாண்டி அறிவித்திருந்தார். சமீபத்தில் அவருக்கு மிகவும் கோலாகலமாக வளைகாப்பு விழாவும் நடைபெற்றது. இந்நிலையில் சாண்டியின் மனைவி சில்வியாவுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தள்ளார்.

sandy-son-cinemapettai
sandy-son-cinemapettai

குழந்தையின் கையைப் பிடித்தவாறு உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாண்டி அதன் பின்புறத்தில் வந்தாய் அய்யா என்ற பாகுபலி பாடலை ஒலிக்கச் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

sandy-son-cinemapettai

தற்போது அந்த குழந்தையின் புகைப்படத்தை முதல் முதலாக சாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குழந்தையின் பெயர் S.D ஷவன் மைக்கல் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் சாண்டிமற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Trending News