வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஹீரோக்களை ஓரம்கட்டிய சாண்டி மாஸ்டரின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?

Sandy Master : கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர். டாப் நடிகர்களின் படங்களில் சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதில் கவின் உடன் இணைந்து அந்த சீசனை சண்டி மாஸ்டர் கலகலப்பாக எடுத்துச் சென்றார். அதோடு மட்டுமல்லாமல் பிக் பாஸ்க்கு பிறகு சாண்டி மாஸ்டருக்கு நிறைய வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இப்போது சாண்டி கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார்.

Also Read : பிக் பாஸ் கோடி கோடியாய் கொட்டியும் ஒரு பிரயோஜனமும் இல்ல.. கேபிஒய் தீனா செய்யப் போகும் தரமான சம்பவம்

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்திலும் சாண்டி மாஸ்டர் நடித்திருக்கிறார். இதில் எந்த மாதிரியான கேரக்டரில் இவர் வருகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த சூழலில் சாண்டி மாஸ்டரின் சொத்து மதிப்பு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது சாண்டி மாஸ்டர் பல கோடிகளுக்கு அதிபதியாக உள்ளார் என்ற விஷயம் இப்போது தான் பலருக்கு தெரிந்துள்ளது. ஏனென்றால் வெளியில் மிகப்பெரிய ஆடம்பரம் இல்லாத மனுஷன் தான் இவர். அதுமட்டுமின்றி ஆடம்பரமான கார், பைக், உபகரணங்கள் போன்றவற்றை சாண்டி மாஸ்டர் பயன்படுத்தி ரசிகர்கள் யாரும் பார்த்ததில்லை.

Also Read : இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் பெண்.. பிக் பாஸ் போட்டியாளராக லாக் செய்த விஜய் டிவி

ஆனாலும் சாண்டி மாஸ்டர் இடம் தற்போது 7 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருக்கிறதாம். இப்போது உள்ள சில ஹீரோக்களையே ஓரம் கட்டும் அளவிற்கு சாண்டியின் சொத்து மதிப்பு இருக்கிறது. மேலும் இவர் தனது மச்சினிச்சியுடன் போடும் குத்தாட்ட வீடியோக்கள் பல மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சென்று வைரலாகும்.

இதனால் சமூக வலைத்தளம் வாயிலாகவும் சாண்டி நல்ல வருமானம் ஈட்டி வருகிறார். வெளியில் எந்த பந்தாவும் இல்லை என்றாலும் அவரின் சொத்து மதிப்பை வைத்து பார்க்கும் போது சாண்டியும் கோடீஸ்வரர் தான் என்பது தெரிய வந்திருக்கிறது. இப்போது கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளதால் இன்னும் அவரது மார்க்கெட் ஏற அதிக வாய்ப்பு இருக்கிறது.

Also Read : நான்காவது காதலரையும் கழட்டி விட்ட பிக்பாஸ் பிரபலம்.. என்ன லிஸ்டு நீண்டுட்டே போது!

Trending News