புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மறுமணம் செய்து கொண்ட சாண்டி-யின் முன்னாள் மனைவி.. காதும் காதுமாய் வச்சு நடந்த திருமணம்

Sandy’s Ex Wife Secret Marriage: இன்னாருக்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன், திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்று காலம் காலமாக வித்திட்ட வழக்கு. ஆனால் தற்போதைய காலத்தில் இதையெல்லாம் ஒன்றுமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு திருமணத்திற்கு பின் கணவன் மனைவிக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு விட்டால் உடனே அவர்கள் போய் தீர்வு காண்பது விவாகரத்து ஆகத்தான் இருக்கிறது.

இதில் பலரும் மாட்டிக் கொண்ட நிலையில், சினிமா பிரபலங்களுக்கு இது ஒரு சாதாரண விஷயமாகவே மாறிவிட்டது. அந்த வகையில் கொரியோகிராபர் சாண்டி மாஸ்டரும் அவருடைய முதல் மனைவியை விவாகரத்து பண்ணி இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என்று வேறொரு வாழ்க்கையில் இணைந்து விட்டார்.

இதனால் தற்போது இவருடைய முன்னாள் மனைவியும் யாருக்கும் தெரியாமல் காது காதுமாய் வச்சு மறுமணம் செய்து கொண்டார். அதாவது சாண்டி மாஸ்டர், நடிகை காஜல் பசுபதியை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய இல்லற வாழ்க்கை 2012 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த நிலையில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள்.

Also read: 2023-ல் மிரட்டிய 6 சைக்கோ வில்லன்கள்.. சாக்லேட் காபி கேட்டு தளபதியை அலறவிட்ட சாண்டி மாஸ்டர்

இதனை அடுத்து சாண்டி மாஸ்டர் வேறு ஒரு திருமணம் செய்த நிலையில், நடிகை காஜல் மட்டும் கிட்டத்தட்ட 11 வருட காலமாக தனிமையில் வாழ்ந்து வந்திருக்கிறார். ஆனாலும் சாண்டி குடும்பத்துடன் நெருங்கிய நண்பர்களில் ஒருவராகவும், இவர் வீட்டில் ஏதாவது நிகழ்ச்சி நடந்தால் அதில் பங்கேற்றும் காஜல் வந்தார். இவர் கோ படத்தில் வில்லன் கூட்டத்தில் ஒருவராகவும், மௌன குரு, கதம் கதம் படங்களில் வலுவான கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

அத்துடன் மறைந்த நடிகர் விவேக்கிற்கு மனைவியாக பெருமாள் படத்தில் இடிதாங்கி மனைவியாக நடித்திருப்பார். இப்படி துணை கதாபாத்திரத்தில் மற்றும் காமெடி கேரக்டரில் நடித்து வந்த இவர் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பின் 70 நாட்களில் வெளியேறினார். அதன் மூலம் மிகவும் பிரபலமானார்.

தற்போது இவருக்கென்று ஒரு துணை வேண்டும் என்று முடிவு பண்ணிய நிலையில் யாருக்கும் தெரியாமல் இரகசியமாக இரண்டாவது திருமணத்தை செய்து விட்டார். இவர் மணமகளாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனாலும் இவர் யாரை திருமணம் செய்து கொண்டார், மணமகன் யார் என்பது ரகசியமாகவே இருக்கிறது.

சாண்டி-யின் முன்னாள் மனைவி காஜல் பசுபதி

kajal pasupathi
kajal pasupathi

Also read: ஹீரோக்களை ஓரம்கட்டிய சாண்டி மாஸ்டரின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?

Trending News