புதன்கிழமை, ஜனவரி 8, 2025

வில்லனுக்கு பிறந்தநாள் பரிசு அளித்த கேஜிஎப்-2 படக்குழு.. நன்றி தெரிவித்த ஆதிராவின் வைரல் பதிவு

கேஜிஎப் முதல் பாகம் அதிக வசூலையும் ரசிகர்களின் வரவேற்பும் பெற்றது. அதைத்தொடர்ந்து கேஜிஎப் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இத்திரைப்படம் எப்போது வெளியாகும், என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்த நிலையில் இப்படத்தின் இயக்குனர் “பிரசாந்த் நீல்” ஜூலை 16ம் தேதி வெளியாகும் என்று ஒரு அறிவிப்பை அறிவித்திருந்தார்.

இருப்பினும் covid19 இரண்டாவது அலை திரையரங்குகள் மூடப்பட்டது. தற்போது 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்கி வரும் நிலையில், படத்தின் வெளியீடு சிறிது தாமதமாக உள்ளது . மேலும் பண்டிகை காலங்களில் வெளிவந்து ரசிகர்களிடையே இன்னும் அதிக வரவேற்பு கிடைக்கும் என்றும், தற்போது உள்ள நிலை மாறி மக்கள் இயல்பு நிலைக்கு மாறி விடுவார்கள் என்றும் கேஜிஎப் இரண்டு திரைப்பட குழு அறிவித்துள்ளது. எனவே, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியிடப்போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் ஜூலை 29 ஆம் தேதி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் ‘சஞ்சய்தத் ‘அவர்களுக்கு திரைத்துறையினர் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். கேஜிஎப் திரைப்பட இயக்குனர் பிரசாந்த் நீல் தனது ட்விட்டர் பக்கத்தில் “அதிராவின் கதாபாத்திரம் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது”, போர் முன்னேற்றத்திற்கானது, கழுகுகள் கூட என்னுடன் உடன்படும் ” ஹாப்பி பர்த்டே” சஞ்சய்தத் பாபா கேஜிஎப் 2 படத்திற்கு நீங்கள் ஒரு பங்காக இருந்ததற்கு நன்றி.

மேலும் உங்களுக்கு பணியாற்ற காத்திருக்கிறேன், என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். மேலும் அதிரா என்ற பெயரிடப்பட்ட கதாபாத்திரத்தில் சஞ்சய்தத் நடிக்கிறார் .அதன் வித்தியாசமான ஒரு போஸ்டரை சஞ்சய் தத் பிறந்த நாள் பரிசாக கேஜிஎப் 2 பட குழு வெளியிட்டுள்ளது.

sanjay-dutt
sanjay-dutt

இதற்கு நன்றி தெரிவித்து சஞ்சய்தத் கூறியது” இப்படத்தில் பணியாற்றுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. இதைவிட சிறந்த பிறந்தநாள் பரிசாக எனக்கு எதுவும் கிடைக்காது” என்று கூறியிருக்கிறார். இந்த போஸ்டர் வெளியானது ரசிகர்களிடையே திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Trending News