செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

விடாமுயற்சி படத்தில் வில்லன் சஞ்சய் தத் இல்ல.. 12 வருடம் கழித்து இணையும் அனுமன் வில்லன்

Vidamuyarchi Movie Update: துணிவு படத்திற்குப் பிறகு அஜித், மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அஜர் பைஜானில் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. அங்கிருந்து வந்த தகவலின் படி விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாக யார் நடிக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

முதலில் லியோ படத்தில் விஜய்யுடன் நடித்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தான் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு வில்லன் ஆகிறார் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் லியோ படத்தில் வில்லனாக நடிக்கும் ஆக்சன் கிங் அர்ஜுன் இப்போது விடாமுயற்சி படத்திலும் வில்லனாக நடிக்கிறார். அதனால் தான் லியோ படத்தின் எந்த பிரமோஷன் நிகழ்ச்சியிலும் அர்ஜுனை நம்மால் பார்க்க முடியல.

அவர் விடாமுயற்சியின் படப்பிடிப்பு நடைபெறும் அஜர் பைஜானில் இருப்பதால் லியோ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் எதிலும் கலந்து கொள்ள கமிட் ஆகவில்லை. லியோ படத்தில் தனக்குரிய போர்ஷனை முடித்துவிட்டு உடனடியாக விடாமுயற்சியில் நடிக்க கிளம்பி விட்டார். மேலும் அஜித்- அர்ஜுன் இருவரும் 12 வருடத்திற்கு பிறகு மறுபடியும் விடாமுயற்சியில் இணைகின்றனர்.

இவர்கள் ஏற்கனவே மங்காத்தா படத்தில் இணைந்து நடித்து தரமான சம்பவத்தை செய்தனர். அதன் தொடர்ச்சியாக இப்போது விடாமுயற்சியிலும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. இது தல ரசிகர்களை குதூகல படுத்தியது மட்டுமில்லாமல் விடாமுயற்சியின் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிற வைத்திருக்கிறது.

அர்ஜுன் தனது சொந்த இடத்தில் அனுமனுக்கு கோயில் ஒன்றைக் கட்டியும் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடத்தினார். இது அவருடைய நீண்ட நாள் கனவு. இதனை அவருடைய ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும் அனிருத் இசையில், லைக்கா தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வரும் விடாமுயற்சியின் படப்பிடிப்பு தற்போது அஜர் பைஜானில் நடந்து வருவதால் பாலஸ்தீன- இஸ்ரேல் போர் காரணமாக இதன் படப்பிடிப்பு பாதிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.

இப்போது அஜர் பைஜான் அரசு சுற்றுலா பயணிகளை வெளியேறச் சொல்லி அறிவுறுத்தி உள்ளனர். விரைவில் விடாமுயற்சி பட குழு அஜர் பைஜானில் இருந்து இந்தியா திரும்பி, வேறு ஏதாவது இடத்தில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் அஜித்- அர்ஜுன் உடன் திரிஷா, ரெஜினா, பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கின்றனர்.

Trending News