திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எல்லாம் அனுபவிச்ச நீங்களே இப்படி பண்ணலாமா?.. லியோவால் சஞ்சய் தத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி

Leo- Sanjay Dutt: தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தின் முதல் சிங்கிள் ‘நான் ரெடி தான் வரவா’ பாடல் வெளியானதில் இருந்தே படத்திற்கு ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்பட்டது. புகை பிடிப்பது, மது அருந்துவதை ஊக்கப்படுத்துவது போல் விஜய் இதில் நடித்திருக்கிறார் என்று பொதுமக்கள் தொடங்கி, அரசியல் பிரபலங்கள் வரை எக்கச்சக்க கண்டனங்களை தெரிவித்து இருந்தனர்.

லோகேஷ் கனகராஜின் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்கள் போதை பொருள் கடத்தல் என்ற கதை களத்தையே மையமாகக் கொண்டு இருக்கும். லியோ படத்தின் ஒரு சில காட்சிகளை பார்க்கும் பொழுது அதன் தொடர்ச்சி போல்தான் இதுவும் இருக்கிறது. இதனால் அதிகமாகவே புகை பிடிக்கும் காட்சிகள் இந்த படத்தில் வர வாய்ப்பு இருக்கிறது.

Also Read:ரஜினிக்கு வில்லனாகும் கமல்.. அடுத்த 1000 கோடி வசூலுக்கு லோகேஷ் போடும் புது கணக்கு!

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். சமீபத்தில் அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டமாக லியோ படக்குழு ஒரு கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டு இருந்தது. ஆண்டனி தாஸ் என்னும் பெயரில் மிரட்டும் வில்லனாக சஞ்சய் தத் அதிலிருந்தார். மேலும் அவருக்கும் புகை பிடிக்கும் காட்சிகள் வைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

சஞ்சய் தத் புகை பிடிக்கும் காட்சிகள் ரசிகர்களை ஊக்குவிப்பது போல் இருக்கிறது என்பதை தாண்டி அவருக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனை வேறு விதமாக இருக்கிறது. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மீடியா முன்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதில் தனக்கு நுரையீரல் புற்று நோய் நான்காம் கட்டத்தில் இருந்ததாகவும், சிகிச்சை எடுத்துக் கொண்டு குணம் பெற்று விட்டதாகவும் சொல்லி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தார்.

Also Read:விஜய் கூட நடிக்கும் போதே அந்த படம் பிளாப் ஆயிடும்னு தெரியும்.. எரியுற நெருப்புல எண்ணெய் ஊற்றிய நடிகை

நுரையீரல் புற்றுநோய் போன்ற ஒரு கொடிய நோயிலிருந்து இவர் மீண்டு இருப்பது அப்போது பாலிவுட் உலகத்தினராலும், ரசிகர்களாலும் பிரம்மிப்பாக பார்க்கப்பட்டதோடு, அவருக்கு வாழ்த்துகளையும் சொல்லி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் படத்திற்காக சிகரெட் பிடிப்பது போல் இவர் நடித்திருப்பது அவருடைய ஆரோக்கியத்திற்கே கேடு விளைவிப்பதாக இருக்காதா என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

நுரையீரல் புற்று நோய் என்பது எவ்வளவு கொடுமையானது, அது எந்த காரணத்தால் வரும் என அத்தனையும் தெரிந்த இவரே இது போன்ற காட்சிகளில் நடித்திருப்பது தவறான விஷயம். சமூகத்திற்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் இது போன்றவர்கள், பணத்திற்காகவும், புகழுக்காகவும் தங்களை தாங்களே வருத்திக் கொள்வதோடு, மக்களையும் தவறான வழியில் சிந்திக்க வைப்பதாக நெட்டிசன்கள் சஞ்சய் தத்தை கேள்வி கேட்டு வருகின்றனர்.

Also Read:லியோவை ஓரங்கட்டிய ஜெயிலர்.. எகிறிய பிசினஸால் தூக்கத்தை தொலைத்த விஜய்

Trending News