வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

போற போக்க பாத்தா லியோவுக்கு டஃப் கொடுப்பார் போல.. சஞ்சய் லிஸ்ட்டில் இருக்கும் 3 ஹீரோக்கள்

Leo-Sanjay: ஹீரோ அவதாரம் எடுப்பார் என்று எதிர்பார்த்த விஜய்யின் வாரிசு தற்போது இயக்குனராக தன் முதல் படியை எடுத்து வைத்துள்ளார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் சஞ்சய் அறிமுகமாகும் படத்தில் யார் ஹீரோ என்ற எதிர்பார்ப்பு தான் இப்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

ஆரம்பத்தில் அஜித், விஜய் சேதுபதி இருவரில் ஒருவர் தான் ஹீரோ என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அது உண்மை கிடையாது என்று தெரியவந்துள்ளது. அந்த வகையில் சஞ்சய் தற்போது முழு வீச்சில் தன் படத்தை இயக்குவதற்கு ஆயத்தமாகி கொண்டிருக்கிறாராம்.

Also read: இயக்குனர் ஆகி அப்பாவுக்கே ஷாக் கொடுத்த ஜேசன் சஞ்சய்.. ஆனாலும் விஜய் ரொம்ப ஸ்ட்ரிக்ட் போல

அதில் மூன்று இளம் ஹீரோக்களை தேர்ந்தெடுத்து வைத்துள்ள அவர் விரைவில் ஒருவரை வைத்து பட வேலைகளை ஆரம்பிக்க இருக்கிறார். அதன்படி அவருடைய லிஸ்ட்டில் தற்போது கவின், ஹரிஷ் கல்யாண், அதர்வா ஆகிய மூன்று ஹீரோக்கள் இருக்கின்றனர்.

இவர்களில் ஒருவரை தேர்வு செய்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட தயாரிப்பு தரப்பு ஆர்வம் காட்டி வருகிறது. இதில் தற்போது அனைவருக்கும் பிடித்த நடிகராக இருக்கும் கவினுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்று பேசப்பட்டு வருகிறது.

Also read: சுதா கொங்காரா, ஏஆர் முருகதாஸுக்கு டிமிக்கி கொடுத்த சஞ்சய்.. தாத்தா சப்போர்ட்டில் முளைத்திருக்கும் தளபதியின் வாரிசு

மேலும் சஞ்சய் படத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாக எடுத்து முடிப்பதில் தீவிரமாக இருக்கிறாராம். இவருடைய வேகத்தை பார்த்தால் லியோவுக்கே டஃப் கொடுப்பார் போல என்று பலரும் கிண்டலாக பேசி வருகின்றனர். அது சரி குட்டி லியோ, அப்பா மாதிரி தானே இருக்கும்.

இப்படி ஆரம்பத்திலேயே அதகளம் செய்யும் சஞ்சய் இந்த படத்தில் முக்கியமான ஒரு நடிகரையும் கேமியோ ரோலில் நடிப்பதற்கு பேசி வருகிறாராம். அவர் வேறு யாரும் கிடையாது விஜய் சேதுபதி தான். ஏற்கனவே இவரை வைத்து தான் என்னுடைய முதல் படத்தை எடுப்பேன் என்று சஞ்சய் கூறிய விஷயம் எஸ் ஏ சந்திரசேகர் மூலம் தெரியவந்தது. ஆனாலும் இது எந்த அளவுக்கு உண்மை என்பது போகப் போக தெரிந்து விடும்.

Also read: கொக்கு போல் காத்திருந்த சன் பிக்சர்ஸ்.. பட்ட நாமம் போட்ட விஜய், ஆஸ்தான தயாரிப்பாளருக்கு ஓகே சொன்ன தளபதி-69

Trending News