வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தளபதி விஜய் செய்யாததை செய்யப்போகும் சஞ்சய்.. அப்பா எட்டடி பாஞ்சா குட்டி 16 அடி பாயுது

Vijay Son Sanjay: கோலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக ரவுண்டு கட்டிக் கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவர் மட்டுமல்ல இப்போது தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்க இவருடைய மகன் ஜேசன் சஞ்சய்-யும் வந்துவிட்டார். அதுவும் இத்தனை வருடங்களாக விஜய் செய்யாததை தன்னுடைய முதல் படத்திலேயே துணிச்சலுடன் சஞ்சய் செய்யப் போகிறார்.

பொதுவாக சினிமா பிரபலங்களின் வாரிசு திரை உலகில் அறிமுகமாகுவது புதிதல்ல. ஆனால் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக தான் என்ட்ரி கொடுப்பார் என தளபதி ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர். ஆனால் அவர் தன்னுடைய தாத்தா எஸ்ஏ சந்திரசேகர் போல் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

Also Read: நேர்மையான கேரக்டரில் கச்சிதமாக நடிக்கும் 5 ஹீரோக்கள்.. தளபதி மிரட்டிவிட்ட ஜீவானந்தம் கேரக்டர்

இவருடைய முதல் படத்தை லைக்கா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இருப்பினும் இந்த படத்தை குறித்த மற்ற தகவல் எதுவும் வெளிவராமல் இருந்தது. இப்போது ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தைக் குறித்த அப்டேட் வெளியாகி இணையத்தில் வைரலாக பேசப்படுகிறது.

தற்போது சஞ்சய் யுனிவர்சல் ஸ்டோரியை கையில் எடுத்திருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகனாக கவின் நடிக்க உள்ளார். அதுவும் இந்த படத்தை 10 மொழிகளில் எடுக்கப் போகிறார். காரணம் அந்த படத்தின் கதை ஒரு யுனிவர்சல் ஸ்டோரி என்பதால் இந்த முடிவை துணிச்சலுடன் எடுத்துள்ளார். இதுவரை விஜய் கூட 10 மொழி படங்களில் நடிக்கவில்லை.

Also Read: லியோவுக்கு மட்டும் தான் பிரச்சனைக்கு மேல பிரச்சனை.. அடுத்தடுத்து நேரு ஸ்டேடியத்தை ஆக்கிரமிக்கும் 4 படங்கள்

ஆனால் முதல் படத்திலிருந்து அவருடைய மகனான ஜேசன் சஞ்சய் இதை செய்யப் போகிறார். இதற்கு அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்காவும் ஓகே சொல்லிவிட்டது. சூர்யா தற்போது கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 10 மொழிகளில் தயாராகிறது. ஆனால் இதெல்லாம் ஆச்சரியம் அல்ல.

வெறும் 23 வயதில் தன்னுடைய முதல் படம் உலக அளவில் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு எடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் சஞ்சய் தற்போது யுனிவர்சல் கதையை கையில் எடுத்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது. அப்பா எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாய்கிறது என்றும் தளபதி ரசிகர்கள் இந்த தகவலை டிரெண்டாக்குகின்றனர். அது மட்டுமல்ல ரொம்பவும் கான்பிடென்ட் ஆக இருக்கக்கூடிய ஜேசன் சஞ்சய், முதல் படத்திலேயே தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்காமல் விடமாட்டார் போல் தெரிகிறது.

Also Read: உலக நாயகனை உப்புக்குச் சப்பாணியாக பயன்படுத்திய லோகேஷ்.. இது தெரியாமல் பூரித்துப் போன விஜய்

Trending News