திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சஞ்சீவின் அக்கா இந்த நடிகையா? கொடிய நோயால் இறந்த சோகம்

விஜய் நண்பர் சஞ்சீவ் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அவருடைய குணத்துக்கு கண்டிப்பாக பிக் பாஸ் வீட்டுக்குள் பிரச்சனை வந்து மக்களிடம் கெட்ட பெயர் வரும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அப்படியே அவருடைய நல்ல குணங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விட்டது.

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்கள் மேலும் அவர் கவனம் எடுத்துக்கொள்வது பலரையும் கவர்ந்துள்ளது. சஞ்சீவி பற்றிய அவருடைய மனைவி அடிக்கடி சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு விஷயத்தை ஷேர் செய்து வருகிறார்.

இப்படிப்பட்ட சஞ்சீவ் க்கு ஒரு அக்கா இருந்திருக்கிறார் என்பதும் அவர் தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை என்பதும் பலருக்கும் புரியாத ஒன்றாகவே இருந்தது. அவரது பெயர் சிந்து. ராம்கி அருண்பாண்டியன் நடித்த இணைந்த கைகள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இது மட்டுமில்லாமல் கே எஸ் ரவிக்குமார் இயக்கிய பெரும்பாலான படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதிலும் குறிப்பாக பிஸ்தா படத்தில் நடிகை நக்மாவின் அக்கா காதலரின் மனைவியாக நடித்திருப்பார்.

Sindu-Cinemapettai.jpg
Sindu-Cinemapettai.jpg

சினிமா நடிகைகள் தங்களுடைய சினிமா மார்க்கெட் குறையும்போது அப்படியே சீரியலுக்கு சென்றுவிடுவார்கள். அப்படித்தான் சிந்துவும் ஒரு காலகட்டம் வரை சின்னத்திரையில் நடித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு ஆஸ்துமா பிரச்சனை நீண்ட நாட்களாக இருப்பது தெரியவந்தது. அதுமட்டுமில்லாமல் நுரையீரல் பிரச்சனை போன்ற உடம்பில் பல பிரச்சனைகள் வர முப்பத்தி மூன்று வயதில் இயற்கை எய்தினார். அவர் இறக்கும்போது அவருக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது.

அவரை தாய்மாமன் என்ற பொறுப்பை எப்படியாவது கரை சேர்த்து விட வேண்டும் என சஞ்சீவ் தந்தை ஸ்தானத்திலிருந்து அந்தப் பெண் குழந்தையை பாதுகாத்து வருகிறார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. இதை கடந்த வாரம் நிகழ்ச்சியில் கூறி அனைவரையும் கண்கலங்க வைத்தார்.

Trending News