சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சந்தானத்திற்காக மட்டுமே ஓடிய 5 படங்கள்.. அந்த ஹீரோக்களே கொஞ்சம் அரண்டுதான் போனாங்க

தமிழ்சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கவுண்டமணி, செந்தில், வடிவேல், விவேக் ஆகியோருக்கு அடுத்தபடியாக நகைச்சுவை நடிகராக கலக்கியவர் சந்தானம். இவர் சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே அதிக ரசிகர்களை பெற்றார். கதை இல்லை என்றாலும் சந்தானத்தின் காமெடிக்காகவே சில படங்கள் ஓடியது.

சிவா மனசுல சக்தி: ஜீவா, சந்தானம், அனுயா நடிப்பில் வெளியான திரைப்படம் சிவா மனசுல சக்தி. இப்படத்தில் காதல் ஜோடிக்கு இடையேயான சண்டையை மையமாக வைத்து எடுத்திருந்தாலும் பிரதான காட்சிகளில் சந்தானம்தான் அசத்தியிருந்தார். இப்படத்தில் இவரின் டைமிங் ஆன காமெடி மூலம் கைத்தட்டல் பெற்றார்.

ஒரு கல் ஒரு கண்ணாடி: ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருந்தார் சந்தானம். இப்படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை சந்தானத்தின் கவுண்டருக்கு எல்லையே இல்லை. இப்படத்தை சந்தானம், மதுமிதா ஜோடி திரையரங்குகளில் சிரிப்பலையை ஏற்படுத்துவது.

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க: ஆர்யா, சந்தானம், தமன்னா நடிப்பில் வெளியான திரைப்படம் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க. குழந்தையிலிருந்தே நண்பர்களாக இருந்தவர்கள் வாசுவும், சரவணனும். வாசு திருமணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை. இப்படத்தில் ஆர்யா விட சந்தானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தை சுவாரசியம் குறையாமல் எடுத்துச்சென்ற அதற்கு முக்கிய காரணம் சந்தானம்.

ஆல் இன் ஆல் அழகுராஜா: கார்த்தி, சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆல் இன் ஆல் அழகுராஜா. பொதுவாக ராஜேஷ் படம் என்றாலே அதில் சந்தானம் தான் ஹீரோவாக இருப்பார். அதேபோல் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்திலும் கார்த்திக்கு இணையாக சந்தானம் நடித்துள்ளார். இப்படத்தில் சேனல் விளம்பரத்திற்காக சந்தானம் பெண் வேடமிட்டு நடித்தது ரசிகர்களை கவர்ந்தது.

பாஸ் என்கிற பாஸ்கரன்: ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் பாஸ் என்கிற பாஸ்கரன். இப்படத்தில் பாஸ்கரனின் நண்பனாக நல்ல தம்பி கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்திருந்தார். ஆர்யா, சந்தானம் காம்போ எப்போதுமே ரசிகர்கள் கவரும்படி இருக்கும். அந்த வகையில் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருந்த படம் பாஸ் என்கிற பாஸ்கரன்.

Trending News