திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஒரே படத்தால் எல்லா கடனையும் அடைக்கும் நடிகர்.. பழைய படங்களை தூசி தட்டி வெளியிட காத்திருக்கும் தயாரிப்பாளர்கள்!

Tamil Movie Hero: தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நடிகர் ஒருவருக்கு சமீபத்தில் ஒரு படம் மிகப்பெரிய அளவில் கை கொடுத்து இருக்கிறது. அந்த படத்தின் வெற்றியால் வாங்கிய மொத்த கடனையும் அடைக்கும் அளவிற்கு நடிகர் தேறி இருக்கிறார். மேலும் இவர் வேண்டவே வேண்டாம் என அலறி ஓடிய தயாரிப்பாளர்கள் இப்போது இவருடன் படம் பண்ண காத்துக் கிடக்கின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழ் சினிமா உலகின் நகைச்சுவை மன்னனாக பெயர் பெற்ற சந்தானம், திடீரென ஹீரோவாக களம் இறங்கினார். நகைச்சுவையான படங்களில் நடிக்கும் வரைக்கும் இது அவருக்கு ஒர்க் அவுட் ஆகியது. நடித்தால் இனி ஹீரோ தான் என முடிவெடுத்து சீரியஸ் கதைகளை தேர்ந்தெடுத்த பொழுது சந்தானத்திற்கு மொத்தமும் சறுக்கியது.

Also Read:சந்தானத்தை ஓரங்கட்ட பார்த்த கவுண்டமணி.. சிம்பு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

பட்ட தோல்வியை ஒத்துக் கொள்ள முடியாமலும், ஹீரோ அந்தஸ்தை விட்டுக் கொடுக்க முடியாமலும் கடந்த மூன்று வருடங்களாக சந்தானம் அடிமேல் அடி வாங்கிக் கொண்டிருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். இவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் முன் வராத நிலையில் தானே தயாரித்து, சம்பளம் இல்லாமல் நடித்து கடனாளியாகவும் ஆகிவிட்டார்.

சந்தானமே எதிர்பார்க்காத அளவிற்கு சமீபத்தில் அவருடைய நடிப்பில் ரிலீசான டிடி ரிட்டன்ஸ் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களாக தியேட்டர்களில் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது இந்த படம். சந்தானத்திற்கு இந்த படம் தற்போது சரியான டர்னிங் பாயிண்டாக மாறிவிட்டது.

Also Read:பேராசையில் 10 பைசா வாங்காமல் நடித்துக் கொடுத்த சந்தானம்.. தயாரிப்பாளர்களை வச்சு செய்யும் சம்பவம்

தற்போது இந்த படத்தில் கிடைத்த லாபத்தை வைத்தே சந்தானம் தன்னுடைய கடன்களை எல்லாம் அடைத்து வருகிறார். மேலும் தயாரிப்பாளர்களுக்கும் இவர் மீது நம்பிக்கை வந்ததால், ஏற்கனவே இவர் நடித்து ரிலீஸ் ஆகாமல் இருக்கும் நிறைய படங்களை தூசி தட்டி ரிலீஸ் செய்ய முடிவெடுத்து இருக்கிறார்கள்.

நடிகர் சந்தானமும் இனி நடித்தால் ஹீரோ தான் என்ற முடிவை மாற்றிவிட்டு, தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காமெடி ரோல்களை கண்டிப்பாக ஏற்று நடிப்பேன் என, ஹீரோக்களுக்கும், இயக்குனர்களுக்கும் சைலன்டாக க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டார். இனி சந்தானம் காட்டில் பண மழை அடித்து கொட்டுவது என்பது உறுதி. காமெடியனாக நடிக்கப் போகிறேன் என்று சொன்ன வார்த்தைக்கே அவருடைய வாழ்க்கை மொத்தமாக மாறிவிட்டது.

Also Read:தக்காளியை போல் சந்தானத்திற்கு வந்த வாழ்வு.. ஒரு படம் ஓடினா இப்படியா சம்பளத்தை கூட்டுறது

Trending News