ஒரு நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது திரை உலகில் இருக்கக்கூடிய முன்னணி ஹீரோக்களுக்கே டப் கொடுத்து வரும் நடிகர் தான் சந்தானம். சமீபகாலமாக நகைச்சுவை மற்றும் கதையின் ஹீரோ ஆகிய இரண்டு கதாபாத்திரத்தையும் நடிகர் சந்தானம் தானே செய்து வருகிறார். நடிகர் சந்தானம் தற்போது நடித்து வெளியான படம் டிக்கிலோனா. இந்த படத்தில், ஊனமுற்றவர்களை கேலி செய்து பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இந்த காட்சிகளை எதிர்த்து டிசம்பர் 3 இயக்கத்தின் மாநில தலைவர் பேராசிரியர் தீபக் அறிக்கை வெளியிட்டுள்ளார். கார்த்தி யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ள டிக்கிலோனா படம் விநாயகர் சதுர்த்தியன்று OTT தளத்தில் வெளியானது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் டைம் டிராவல் பற்றி நகைச்சுவையாக எடுத்த படமாகும்.
அதுமட்டுமின்றி, இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு, முனீஸ்காந்த், ஆனந்தராஜ், லொள்ளு சபா மாறன், போன்றவர்கள் நடித்துள்ளார்கள். இந்த கதை 2027இல் உலகமே இருளில் மூழ்கிக் கிடக்க, அவருக்கு உலகத்தை மாற்றும் வாய்ப்பை வழங்குவதாக இந்த டைம் டிராவல் அமைந்துள்ளது என்பதே கதையின் மையமாகும்.
டிக்கிலோனா படத்தில் சந்தானம் கால் இல்லாதவரை, ‘சைடு ஸ்டாண்ட் போட்டு நடக்கிறார்’ என்று கேலி செய்துள்ளது தற்போது பெரிதும் விமர்சிக்கப்படுகிறது. இது மக்களின் மனதை புண்படுத்துவது போல் அமைந்துள்ளதாக தீபக் கூறியுள்ளார். நகைச்சுவை சிந்திக்க வைப்பதற்கும், சிரிக்க வைப்பதற்கும் மட்டுமே மற்றவர் மனதை புண்படுத்துவதற்காக இல்லை என்றும் சில காரணத்தினால் ஏற்படக்கூடிய உடல் குறைவை இவ்வாறு கேலி செய்வது சமூகத்தின் ஒழுக்கம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
நிறைய சாதனை பண்ணியவர்கள் மாற்றுத்திறனாளிகள் தான் என்றும் மற்ற மக்களை ஒப்பிடும் பொழுது அன்றாட வாழ்க்கையில் ஊனமுற்றவர்கள் படும் கஷ்டங்கள், அதை எதிர்கொள்ளும் விதம் அவர்களைப்போல் வாழ்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.
அவர்களை இப்படி நகைச்சுவை செய்வது சரியில்லை என்றும் அவர்கள் நினைத்த கருத்தை கூறி விட்டதாகவும். இந்த கருத்தை ஊடகங்களும் முன் நிறுத்தி நியாயத்தைப் கேட்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார் தீபக் பேசியுள்ள வீடியோ அதிக கவனம் பெற்று வருகிறது.