செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

10 கோடி செலவழித்து கிடப்பில் கிடக்கும் சந்தான படம்.. ஆறு வருஷமா முட்டி பார்த்தும் பிரயோஜனம் இல்லை

Actor Santhanam: நகைச்சுவை நடிகராய் அறிமுகமாகி, அதன்பின் இனி நடித்தால் படத்தில் ஹீரோவாக தான் நடிப்பேன் என ஒத்த காலில் நிற்பவர் தான் சந்தானம். அவ்வாறு 10 கோடி செலவழித்தும் கிடப்பில் போடப்பட்ட இவரின் படம் குறித்த தகவலை இங்கு காண்போம்.

தன்னுள் இருக்கும் நகைச்சுவை உணர்வால் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து பல படங்களில் பெரிதும் பேசப்பட்டவர் சந்தானம். இவரின் நக்கல், நையாண்டியால் வெற்றி பெற்ற படங்களும் உண்டு. அவ்வாறு சிறந்த நகைச்சுவை நடிகராய் வலம் வந்து கொண்டிருந்தார்.

Also Read: மார்க்கெட்டை இழந்து தவிடு பொடியான மீரா ஜாஸ்மின்.. பாவனா கேசால் பரிதாபமாய் போன கேரியர்

இந்நிலையில் யானை தன் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்டது போல இனி நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்து விட்டார். அதில் ஆரம்பித்தது தான் இவரின் ஏழரை நாட்டு சனி, இன்று வரை படாத பாடு பட்டு கொண்டு வருகிறார்.

ஒரு காலகட்டத்தில் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், சிறுத்தை, விநாயகா, ஒரு கல் ஒரு கண்ணாடி, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் இவரின் நகைச்சுவை மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது. அதை தொடர்ந்து ஏ ஒன், பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்களில் ஹீரோவாக இவர் மேற்கொண்ட முயற்சியில் படு தோல்வியை சந்தித்தார்.

Also Read: விஜய் பண்ணா மட்டும் தான் தப்பா, ரஜினியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. சர்ச்சையை கிளப்பும் ஜெயிலர் போஸ்டர்

இருப்பினும் 10க்கும் மேற்பட்ட படங்களில் நினைத்தவாறு ஹீரோவாக நடித்து விட்டார். இருப்பினும் 2017ல் ஆனந்த் பல்கி இயக்கத்தில் சர்வர் சுந்தரம் என்னும் படம் இவர் நடிப்பில் தொடங்கப்பட்டது. சுமார் 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 6 வருடமாகியும் வெளிவராமல் கிடப்பையில் கிடந்து வருகிறது.

மேலும் இப்படத்தை வாங்க வந்த ஒரு விநியோகஸ்தர் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டாராம். தற்பொழுது எடுத்த படத்தை விற்கவும் முடியாமல் தொடர்ந்து நடத்தவும் முடியாமல் இப்படக்குழு திணறி வருகிறது. இதற்கு காரணமாய் பார்க்கையில், மக்கள் இவரின் நகைச்சுவையை தான் விரும்பினார்கள். ஆனால் ஹீரோவாகத்தான் முயற்சிப்பேன் என இவர் பிடிவாதம் பிடித்து தற்போது வரை சினிமாவில் தலை காட்ட முடியாமல் இருந்து வருகிறார்.

Also Read: குணசேகரனிடம் சிக்கி சீரழியும் சிறுசு முதல் பெருசு.. நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட மருமகள்

Trending News