சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

எனக்கு ஹிட்டு வேணும், அந்தப் படத்தின் மூன்றாம் பாகம் எடுங்க.. கட்டளையிட்ட சந்தானம்

சந்தானம் காமெடியனாக ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற அளவுக்கு இன்னமும் ஹீரோவாக தனக்கென ஒரு அடையாளம் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும் பெரும்பாலான படங்கள் தோல்வி தான்.

அடுத்ததாக சந்தானம் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் டிக்கிலோனா. இந்தப் படம் நேரடியாக வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி zee5 என்ற ஓடிடி இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் வெளியான டிக்கிலோனா படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளதால் கண்டிப்பாக இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை புரிந்து கொண்ட சந்தானம் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுக்க ரெடியாகி வருகிறார்.

அந்த வகையில் சந்தானத்திற்கு ஹீரோவாக மாபெரும் வெற்றி கொடுத்த முதல் திரைப்படம் தில்லுக்கு துட்டு. இந்த படத்தின் இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று செம கல்லா கட்டியது.

இதனால் தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் எடுக்க ஆசைப்பட்டு அந்தப் படத்தின் இயக்குனரான ராம் பாலாவிடம் அதற்கான பணிகளை செய்யுமாறு ஏற்கனவே சொல்லி விட்டாராம் சந்தானம்.

விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம். அதேபோல் சந்தானம் நடிப்பில் சபாபதி, சர்வர் சுந்தரம் போன்ற படங்களும் முழுவதும் ரெடியாகி ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருக்கின்றன.

dillukku-dhuddu-cinemapettai
dillukku-dhuddu-cinemapettai

Trending News