சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

அடிமேல் அடிவாங்கும் சந்தானம்.. கமுக்கமாக நண்பனுக்கு டிமிக்கி கொடுத்த உதயநிதி

Santhanam and Udhayanithi: விதி யாரை தான் சும்மா விட்டுச்சு என்பதற்கு ஏற்ப சந்தானத்தின் சினிமா வாழ்க்கையை ரொம்பவே ஆட்டிப் படைக்கிறது. ஆரம்பத்தில் காமெடியனாக ஜொலித்து வந்த சந்தானம் ஹீரோ ரேஞ்சுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைத்தது. அதனாலேயே முக்கால்வாசி சந்தானம் நடிக்கும் படங்களில் ஹீரோவை மட்டம் தட்டி பேசி கலாய்த்தும் வந்தார்.

அந்த வகையில் சில நடிகர்களுக்கு மிக நெருக்கமான நண்பராகவும் சந்தானம் ஆகினார். அதன் பிறகு தனக்கு கிடைத்த வாய்ப்பை அடுத்த லெவலுக்கு கொண்டு போக வேண்டும் என்று நடிகராகவும் களமிறங்கினார். ஆனால் இவர் ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் சரியாக மக்களிடம் ரீச் ஆகவில்லை. இதனால் துவண்டு போய் இருந்த சந்தானம் மறுபடியும் காமெடி ட்ராக்க்கு வரலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்.

இதற்கிடையில் ஆரம்பிக்கப்பட்ட படங்களை ஒவ்வொன்றாக முடித்து விடலாம் என்று ஒவ்வொரு படத்தையும் ரிலீஸ் பண்ணிக் கொண்டு வருகிறார். அந்த வகையில் வடக்குப்பட்டி ராமசாமி படம் வருகிற பிப்ரவரி மாதம் 2ம் தேதி திரையரங்களில் ரிலீஸ் ஆகப்போகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் பொங்கல் தினத்தை ஒட்டி வெளியிடப்பட்டது.

Also read: சந்தானத்துக்கு போட்டியா பேயோடு மல்லுக்கட்டும் சதீஷ்.. கான்ஜுரிங் கண்ணப்பன் எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

அதில் ஒரு சர்ச்சைக்குரிய விஷயம் தற்போது பூதாகரமாக வெடித்து வருகிறது. அதாவது சாமியே இல்லைன்னு ஒருத்தன் ஊருக்குள்ள சுத்திக்கிட்டு இருந்தானே அந்த ராமசாமி தான நீ என்று கேட்கும்பொழுது, நான் அந்த ராமசாமியில்லை என்று சந்தானம் சொல்ற மாதிரி ஒரு டயலாக் இடம் பெற்றிருக்கிறது. இது பெரியாரைக் குறித்து சர்ச்சைக்குரிய விஷயமாக இருக்கிறது என்று பலரும் எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுவதற்கு உரிமையை வாங்கி இருக்கிறார்கள். அதனால் திமுக தொண்டர்கள் பலரும் பெரியாரை விமர்சிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும் இப்படத்தை எப்படி நீங்கள் வாங்கி வெளியிடலாம் என்று பலரும் உதயநிதிக்கு எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.

அதனால் எதற்கு நமக்கு தேவையில்லாத வம்பு என்று ரெட் ஜெயின்ட் மூவிஸ் இப்படத்தை வெளியிடுவதில் இருந்து பின்வாங்கி விட்டது. ஏற்கனவே சந்தானம் பல கஷ்டங்களை தாண்டி அடி மேல் அடிவாங்கி எப்படியாவது இப்படத்தை வெளியிட வேண்டும் என்று நினைத்தார். இந்த சூழ்நிலையில் உதயநிதி கமுக்கமாக சந்தானத்துக்கு டிமிக்கி கொடுத்து விட்டார். இதனால் தற்போது வடக்குப்பட்டி ராமசாமி படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தான் வெளியிடப் போகிறது.

Also read: கமல் ரஜினிக்காக அடித்துக் கொள்ளும் சந்தானம்.. 80ஸ் பில்டப் அலப்பறையான டீசர்

Trending News