ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

சூரியை பார்த்து மீண்டும் பழைய ட்ராக்கிற்கே வந்த சந்தானம்.. கைவசம் இத்தனை படங்களா?

பல வருடங்களாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கிக் கொண்டிருந்த சூரி, முதல் முதலாக வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக என்ட்ரி கொடுத்தார். இந்தப் படத்தில் ஹீரோவிற்கான அத்தனை விஷயமும் சூரிக்கு பக்காவாக பொருந்தி இருந்தது. இதனால் இனி சூரி மாஸ் ஹீரோவாக தான் அடுத்தடுத்த படங்களில் நடிக்கப் போகிறார் என சொல்லப்பட்ட நிலையில், அதற்கு மாறாக டாப் நடிகர்களின் படங்களில் முன்பு போல் காமெடி நடிகராகவும் நடிக்க நான் தயார் என்று சற்றும் எதிர்பாராத பதிலை அளித்தார்.

இதுதான் நல்ல நடிகருக்கு அழகு. ஆனால் சந்தானம் முதலில் காமெடி ஆக்டராக ரசிகர்களின் ஃபேவரட் நகைச்சுவை நடிகராக ரவுண்டு கட்டிக் கொண்டிருந்த அவர், அதன் பிறகு ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று முற்றிலுமாகவே காமெடியனாக நடிப்பதை தவிர்த்து விட்டார். கடந்த சில வருடங்களாக இவர் ஹீரோவாக நடித்து வெளியான படங்கள் அனைத்தும் படு தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும் நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடிக்கவே மாட்டேன் என ஆணித்தரமாக இருந்து தன்னை ஒரு ஹீரோவாகவே அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ரசிகர்கள் மட்டுமல்ல சந்தானத்தின் நலனை விரும்பிய பிரபலங்களும் அவருக்கு ஹீரோ ரோல் செட் ஆகவில்லை, நகைச்சுவை நடிகராக நடிப்பது தான் உனக்கு நல்லது என அட்வைஸ் கொடுத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் சொன்னதெல்லாம் சந்தானத்திற்கு ஏறவில்லை. இப்போது கண்கூடாக சூரியின் வளர்ச்சியை பார்த்தபின் நாம் செய்வது தவறுதான் போல என்று உணர்ந்து மீண்டும் காமெடி டிராக்டிற்கு வந்திருக்கிறார் சந்தானம்.

Also Read: ஹீரோவாக தான் நடிப்பேன் என்று சொன்ன சந்தானத்துக்கு பதிலடி.. நான் நானாகத்தான் இருப்பேன் என்று சொன்ன சூரி

இதனால் அடுத்தடுத்த படங்கள் இவருக்காக வரிசை கட்டி காத்திருக்கின்றனர். தற்போது இவரிடம் அரை டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கிறார். சபாபதி படத்தை தயாரித்த ரமேஷ் குமார் அடுத்த தயாரிக்கும் படம் ‘டிடி ரிட்டன்ஸ்’ இந்த படத்தை எஸ் பிரேம் ஆனந்த் இயக்குகிறார். மேலும் சந்தானத்திற்கு மாஸ் ஹிட் கொடுத்த தில்லுக்குதுட்டு பாணியில் இந்த படத்தை இயக்க பிரேம் திட்டமிட்டிருக்கிறார். இந்தப் படத்தில் சந்தனத்திற்கு ஜோடியாக சுரபி நடிக்கிறார்.

இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக ‘கிக்’ என்ற படத்தில் சந்தானம் நடிக்கிறார். இந்த படத்தில் மூலம் கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் தமிழுக்கு என்ட்ரி கொடுக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தாராள பிரபு படத்தில் நடித்த தான்யா கதாநாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. டிடி ரிட்டன்ஸ் படத்தை அடுத்து இந்த படம் வெளியாகும்.

Also Read: அக்கட தேச சந்தானத்திற்கு குவியும் வாய்ப்பு.. சிவகார்த்திகேயன், ரஜினி என எகிறும் மார்க்கெட்

அடுத்ததாக சந்தானம் இரட்டை வேடத்தில் நடித்து கலக்கிய டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி அடுத்து இயக்கும் படமான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற படத்தில் சந்தானம் கமிட் ஆகியுள்ளார் இந்த படம் முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாகும். மேகா ஆகாஷ் இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்கிறார்.

சந்தானத்தின் அடுத்த லைன் அப்பில் அன்புச் செழியன் தயாரிப்பில் ‘இந்தியா பாகிஸ்தான்’ பட இயக்குனர் என் ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்போது இரண்டு ஷெட்யூல் வரை படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், அடுத்த மாதம் மீண்டும் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டு இருக்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக லைக்கா தயாரிப்பில் அஜித்தின் ஏகே 62படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. சந்தானம் அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக கால்ஷீட் கொடுத்திருந்தார். அதன் பின் விக்னேஷ் விலகிய பிறகு சந்தானத்தின் கால்ஷீட்டை விலக்காமல் லைக்கா அவரை வைத்து இன்னொரு படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான இயக்குனர், நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. இதைத் தவிர அறிமுக இயக்குனர் ஒருவரின் படத்திலும் சந்தானம் நடிக்கிறார்.

Also Read: மொக்கை காமெடியால் டெபாசிட் இழந்த 5 பட தயாரிப்பாளர்கள்.. அடி மேல அடி வாங்கும் சந்தானம்

இவ்வாறு சந்தானம் மாஸ் ஹீரோவாக்க இவ்வளவு நான் தன்னை நினைத்துக் கொண்டிருந்ததை தூக்கி எறிந்து விட்டு, காமெடியனாக எது செட் ஆகுமோ அப்படிப்பட்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த மாற்றம் நிச்சயம் சந்தானத்திற்கு ஏற்பட்டதற்கு ரசிகர்கள் மட்டுமல்ல பிரபலங்களும் அவரை பாராட்டுகின்றனர். சூரி எப்படி ஹீரோவாக நடித்தாலும் காமெடியனாக நடிக்கவும் தயாராக இருக்கிறாரோ அதேபோல இப்போது அவரைப் பார்த்து சந்தனமும் தன்னுடைய கேரியருக்காக அதை அப்படியே பின்பற்றுகிறார். இதனால் அவருக்கு தொடர்ந்து வர வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறது.

Trending News