சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

சூர்யாவை தொடர்ந்து 3 படங்களை OTT அனுப்பும் சந்தானம்.. என்ன என்ன படங்கள் தெரியுமா?

தமிழ் சினிமாவின் தற்போதைய தவிர்க்க முடியாத காமெடி ஜாம்பவான் சந்தானம். கலாய்க்கும் பேச்சால் பல்வேறு படங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றாலும் காமெடியின் சாயல் என்னவோ கவுண்டமனியின் கமாண்டுகள் தான்.

வடிவேலுவின் வீழ்ச்சியில் தமிழ் சினிமாவின் காமெடி கரங்களை நிரப்பியது என்னவோ சந்தானம் தான். அப்படியாக இருந்து நாயகனாக மாறிவிட்ட சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்  தில்லுக்கு துட்டு உட்பட சில படங்களில் நாயகனாகவும் நடித்தார்.

கடைசியாக நாயகனாக நடித்த படம் பாரிஸ் ஜெயராஜும் தியேட்டரில் ரிலீசானது. கோவிட் 19 ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்கபபடாத நிலையில் இப்போது ஓடிடி யில் படங்களை வெளியிட்டு வருகிறது தமிழ்த்திரை.santhanam1

சந்தானம் நடிப்பில் தயாரான சர்வர் சுந்தரம் டிக்கிலோனா என வரிசை கட்டி நிற்கின்ற மூன்று படங்களும் ஓடிடியில் வெளியிடுவது குறித்து தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதால் படங்கள் வெளியிடும் தேதிகள் ஏதும் இப்போதுவரை அறிவிப்பின்றி உள்ளன.

Trending News