சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

அடுத்தடுத்து 3 படங்களில் கமிட்டான சந்தானம்.. அந்த ஒருத்தர்தான் டார்கெட்டாம்

தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நாயகனாய் வளர்ந்ததுண்டு அந்த வரிசையில் சரியாக பொறுந்தி வெற்றி கண்டவர் நடிகர் சந்தானம். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நகைச்சுவை தொடர் ஒன்றில் பிரபலமான காமெடியனாக வலம் வந்தார்.

பிறகு தமிழ் சினிமாவில் நுழைந்து பல்வேறு படங்களில் இப்போது இருக்கும் லீட் நடிகர்களோடு இணைந்து காமெடியன் ரோலில் கலக்கினார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் வாயிலாய் முதல் முறையாக நாயகனாய் அவதாரம் எடுத்திருந்தார் நடிகர் சந்தானம்.

தொடர்ந்து பல்வேறு நல்ல வரவேற்பை பெற்றிருந்த சந்தானம் காமெடிக்கான புதிய பாதையையே கட்டமைத்தார் என்றால் ஈடாகாது. எல்லோரையும தவிர்த்து தனக்கென்ற ஒரு தனித்துவத்தை தானே கட்டமைத்திருந்தார் சந்தானம். இந்நிலையில் செப்டம்பர்-10ஆம் தேதி வெளியான டிக்கிலோனா படம் பல்வேறு கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஊனமுற்றோரை கேலி செய்ததாய் ஒரு சரச்சையும் எழுந்துள்ளது.

சமீபத்தில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸின் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட சந்தானம் டாக்டர் ரமதாஸ் உடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவேற்றி நீண்ட இடைவெளிக்கு பிறகு ஐயாவுடன் என்று குறிப்பிட்டிருந்தார்.

santhanam-dikkiloona-1
santhanam-dikkiloona-1

அடுத்து சந்தானம் அமலி துமலி, மன்னவன் வந்தானடி, மாப்பிள்ளை விநாயகர் என அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க உள்ளார். என்னதான் வடிவேலு களத்தில் இறங்கினாலும் சந்தானத்திற்கு ஹீரோ வாய்ப்பு வரிசைகட்டி தான் நிற்கிறது. இத்தனை படத்திற்கு காரணம் அந்த ஒரு டிவி நடிகரை விட பெரிய திரையில் மின்ன வேண்டும் என்பதுதானாம்.

Trending News