சந்தானம் என்ற பெயரைக் கேட்டாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது காமெடி நடிகர் என்பது தான். இருந்தாலும் தன்னை ஒரு ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.
சிலமுறை அது கை கொடுத்துள்ளது. பலமுறை காலை வாரிவிட்டது. சந்தானம் என்ன தான் ஹீரோவாக நடித்தாலும் அந்த படத்தில் அதிக அளவு காமெடி காட்சிகள் இருப்பதால் மட்டுமே ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பை பெற்று வருகிறது.
இருந்தாலும் தன்னை ஒரு கமர்சியல் ஹீரோவாக மாற்றிக்கொள்ள தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சந்தானம் படம் முழுக்க சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் தான் சர்வர் சுந்தரம்.
கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திரைப்படம் அப்போதே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் படத்தின் டிரைலரும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
ஆனால் பைனான்ஸ் மேட்டரில் மாற்றி சிக்கி சின்னாபின்னமாகி விட்டது சர்வர் சுந்தரம் திரைப்படம். இந்நிலையில் அதற்கு ஒரு விடிவு காலம் வந்து விட்டதாம். பிப்ரவரி மாதம் கண்டிப்பாக சர்வர் சுந்தரம் திரைப்படம் தியேட்டருக்கு வந்து விடுமாம்.
முன்னதாக சர்வர் சுந்தரம் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. ஆனால் தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டதாலும், அதேசமயம் பைனான்ஸ் பிரச்சினையும் தீர்ந்து விட்டதால் சந்தானம் கண்டிப்பாக சர்வர் சுந்தரம் படத்தை தியேட்டரில் தான் வெளியிட வேண்டும் என கட் அண்ட் ரைட்டாக கூறிவிட்டாராம்.