கலாய்ப்பது கிங்காக இருக்கும் சந்தானம் இப்போது ரீமேக் படத்தில் களமிறங்கியுள்ளார். நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி இன்று ஹீரோவாக வலம் வருபவர் சந்தானம். இவருடைய காமெடிக்கு ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் கவுண்டமணிக்கு அடுத்து தமிழ் சினிமாவில் கலாய்ப்பது சந்தானம் முக்கிய பங்கு கொண்டவர்.
அவருடைய காமெடி சென்ஸ் இடைவிடாத சிரிப்பை கொடுக்கக்கூடியவை. தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக மக்களிடையே பிரபலமாகி திரைப்படங்களில் அறிமுகமானவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மக்களிடையே பேராதரவைப் பெற்றது. அதன் பிறகு சந்தானம் மன்மதன் திரைப்படம் மூலமாக நகைச்சுவை நடிகராக அறிமுகமானார்.
சச்சின், சம்திங் சம்திங், உனக்கும் எனக்கும், வல்லவன், வியாபாரிகளிடம், சந்தோஷ் சுப்பிரமணியம், குசேலன், பாஸ் என்ற பாஸ்கரன், ராஜா ராணி, ஆம்பள உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறப்பாக நடித்திருந்தார். நகைச்சுவை நடிகர் என்ற நிலையிலிருந்து முன்னணி கதாபாத்திரமாக அறை எண் 305ல் கடவுள் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
அதன் பிறகு 2013ல் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தை தயாரித்து வணிகரீதியாக வெற்றி பெற்றார். அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோவாக சந்தானம் நடித்தார் இனிமேல் இப்படிதான், தில்லுக்குதுட்டு போன்ற திரைப் படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார்.
ஏ1 திரைப்படத்தை அடுத்து ஜான்சன் இயக்கத்தில் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் ரிலீஸ் ஆகி வெற்றியடைந்தது. அதனை அடுத்து தெலுங்கில் வெளிவந்து வசூல் சாதனை படைத்த ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா என்ற படத்தை ரீமேக்கில் நடிக்கிறார் சந்தானம்.
கிட்டத்தட்ட 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தெலுங்கில் 20 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிடெக்டிவ் ஏஜென்டாக இந்த படத்தில் புதுவிதமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
அந்த படத்தின் முக்கால் பங்கு படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக நம்பிக்கை கொண்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இன்னும் ஒரு மாதத்திற்குள் படத்தை முடித்துவிட்டு டிக்கிலோனா ,சபாபதி மற்றும் பல திரைப்படங்களில்
பிஸியாக போகிறார் சந்தானம்.