வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அந்த விஷயத்தில் விஜய்யை முந்திய சந்தானம்? நினைச்சா, உடனே செஞ்சரனும்.. யோசிக்கவே கூடாது..

சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘இங்கு நான் தான் கிங்கு’. இதையடுத்து, சுந்தர் சியின் மத கத ராஜா, சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கனும் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் ஹீரோவாக நடித்த டிடி ரிடர்ன்ஸ் உள்ளிட்ட சில படங்கள் தான் ஓடியதாக கூறப்படுகிறது. சில முன்னணி இயக்குனர்களே அவரை அணுகி மீண்டும் காமெடியனாக நடிக்க கேட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என சந்தானம் பிடிவாதமாக உள்ளார். அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் ரெடியாக உள்ளனர்.

விஷால் உள்ளிட்ட சிலர் நடிகர்கள் இயக்குனராகி படமெடுத்து வருகின்றனர். அதேபோல், சந்தானமும் ஒரு படம் இயக்க முடிவெடுத்துள்ளார்.

விஜய்யை முந்திய சந்தானம்?

அவரே இயக்கி, நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. 30 ஆண்டுகளாக சினிமாவில் நடிப்பவர் விஜய். அவரே ஒரு படம் இயக்க ஆசைப்பட்டும் முடியவில்லை.

அரசியலுக்கு வந்துவிட்டார். சினிமாவில் தன் கடைசிப் படமாக விஜய்69 படத்திலும் ஹீரோவாகவே நடிக்கிறார். அதனால் இயக்குனராக முடியவில்லை.

அந்த விஷயத்தில், விஜய்யை முந்தி சந்தானம் விரைவில் இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ளார். அவர் படம் இயக்கிவிட்டால் அது அவருக்கே ஒரு சாதனை தான் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

தான் ஆசைப்பட்ட மாதிரி ஒரு படத்தை இயக்கிவிட்டு, யாமிருக்க பயமேன் பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஹீரோவாக சந்தானம் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News