திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஒருவாட்டி அடிபட்டும் திருந்தாத சந்தானம்.. ஏஜென்ட் கண்ணாயிரம் வெற்றி பெறுமா?

தெலுங்கில் ஏஜென்ட் ஸ்ரீவஸ்தவா படத்தின் தமிழ் ரீமேக் தான் ஏஜென்ட் கண்ணாயிரம். இந்த படத்தில் சந்தானம், குக் வித் கோமாளி புகழ், முனீஸ் காந்த், ரெடின் கிங்ஸ்லி போன்ற பல காமெடி ஜாம்பவான்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற 25ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படி ஏகப்பட்ட நகைச்சுவை நடிகர்கள் நடித்திருந்தாலும் இந்த படத்தில் காமெடியை எதிர்பார்க்க முடியாது என சந்தானம் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். அதாவது இந்த படம் குறித்து சந்தானம் பேசுகையில், ஏஜென்ட் கண்ணாயிரம் ரீமேக் படமாக இருந்தாலும் படத்தில் பல மாற்றங்கள் உள்ளதாக கூறியுள்ளார்.

Also Read : சமீபத்தில் சந்தானம் ரசிகர்களை நோகடித்த 5 படங்கள்.. தியேட்டரில் தலைதெறிக்க ஓட வைத்த குலுகுலு

அதாவது இந்த படம் தாய் மகனிடையே உணர்வு பூர்வமான கதையாக இருக்கும் என்றும் படத்தில் நிறைய ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் சந்தானம் கூறியுள்ளார். ஆகையால் இந்தப் படத்தில் காமெடியை எதிர்பார்த்து வர வேண்டாம் என ரசிகர்களுக்கு சந்தானம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான குலுகுலு படமும் காமெடியே இல்லாமல் எடுக்கப்பட்டிருந்தது. அனைத்தும் கலந்த கலவையாக இருந்த இப்படம் சந்தானத்திற்கு கை கொடுக்கவில்லை. மேலும் சந்தானத்தின் காமெடிக்காக எதிர்பார்த்த வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தான் இப்படம் தந்தது.

Also Read : வடிவேலு, சந்தானம் எடுத்த பிரேக்.. அதிர்ஷ்ட மழையில் நனையும் ஒரே காமெடி நடிகர்

இதனால் மீண்டும் சந்தானம் காமெடி படங்களிலேயே நடித்து வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் காமெடியை இல்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ஏற்கனவே மக்கள் இவரிடம் காமெடியை தான் எதிர்பார்க்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்துள்ளது.

ஆனால் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடிக்கவே சந்தானம் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் ஏஜென்ட் கண்ணாயிரம் படம் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

Also Read : சினிமா சூதாட்டத்தை புட்டுப்புட்டு வைத்த சந்தானம்.. ஒன்றரை வருடமாக அனுபவித்த வேதனை

Trending News