திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்ட சந்தானம்.. பகட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, பொழப்பு சிரிப்பா சிரிக்குது

Actor Sandhanam: சந்தானத்தின் டைமிங் காமெடிக்கு ஈடு இணையாக யாருமே இல்லாமல், ஒன் மேன் ஆர்மியாக வலம் வந்து கொண்டிருந்தார். அதுவும் ஹீரோக்களை கலாய்த்தும், அவர்களுக்கு இணையான ஒரு அந்தஸ்துடன் படத்தில் காமெடியனாக நடித்து வந்தார். அப்படி இருக்கும் பட்சத்தில் சில புது நடிகர்களின் வளர்ச்சியை பார்த்து தாங்க முடியாமல் இவருக்கும் ஹீரோவாக வேண்டும் என்று ஆசை ஏற்பட்டு விட்டது.

அதனால் ஹீரோவாக சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி இரண்டு, மூன்று படங்களில் நடித்த பின்பு இனிமேல் காமெடியனாக எந்த படங்களிலும் நடிக்க மாட்டேன் என்று கொள்கையுடன் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். ஆனால் இவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த இரண்டு வருடங்களாக எந்த படமும் ஓடாமல் கஷ்டப்பட்டு தவியாய் தவித்துக் கொண்டிருந்தார்.

Also read: புலி வாலை பிடித்தது போல் சந்தானத்திற்கு வந்த கஷ்டம்.. நாலா பக்கமும் சூழ்ந்து கொண்ட கெட்ட நேரம்

அந்த வகையில் சமீபத்தில் இவர் நடித்த படங்கள் அத்தனையுமே ஃபெயிலியர் ஆகத்தான் போனது. இப்படிப்பட்ட ஒரு ஹீரோவை வைத்து எந்த தயாரிப்பாளரும் சான்ஸ் கொடுப்பதற்கு விரும்ப மாட்டார்கள். அதனால் இயக்குனர்கள் இவரை எந்த படங்களிலும் நடிக்க வைப்பதற்கு முன் வரவே இல்லை.

இதனால் சந்தானத்துக்கு வேறு வழி இல்லாமல் இவருக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள் மற்றும் பினாமி இவர்கள் பெயரில் இவரே பைனான்ஸ் மூலமாக பணம் வாங்கி கொடுத்து படத்தை எடுத்து வந்திருக்கிறார். இதுல வேற தனக்கென்று ஒரு 5 கோடி சம்பளம் என்று பிக்ஸ் பண்ணி வைத்துக் கொள்வாராம்.

Also read: சந்தானம் பேயுடன் போடும் காமெடி ஆட்டம்.. டிடி ரிட்டன்ஸ் எப்படி இருக்கு.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

அதன் பின் இவர் நடிக்கும் படங்கள் ரிலீஸ் ஆனதற்கு பின் அந்த பணத்தை வாங்கிக் கொள்கிறேன் என்று அக்ரீமெண்ட் போட்டுக் கொள்வாராம். அப்படி சில சூழ்ச்சி வேலைகள் எல்லாம் பண்ணி தற்போது தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்டார். ஏனென்றால் இவரிடம் இருந்த மொத்த காசும் காலியாகிவிட்டது. மொத்தமாக வெளிப்பட்டு

பகட்டு வாழ்க்கைக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு உள்ளதும் கெட்டதடா நொள்ளைக் கண்ணா என்பதற்கு ஏற்ப தற்போது இவருடைய நிலைமை இருக்கிறது. இவ்வளவு நாள் இந்த மாதிரி செய்து வந்த தில்லு முல்லு வேலைகள் எல்லாம் அம்பலமாகி, இவருடைய குட்டு மொத்தமாக வெளிப்பட்டு சிரிப்பாய் சிரிக்கும்படி நிலைமை ஆகிவிட்டது. தற்போது வேறு வழி இல்லாமல் மீண்டும் காமெடியனாகவே போய்விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்.

Also read: கொண்டாடும்போதே வழி மாறி முடிவெடுத்த 3 ஹீரோக்கள்.. சந்தானத்தை போல ஏமாறும் இரண்டு நடிகர்கள் 

Trending News