புதன்கிழமை, ஜனவரி 22, 2025

தக்காளியை போல் சந்தானத்திற்கு வந்த வாழ்வு.. ஒரு படம் ஓடினா இப்படியா சம்பளத்தை கூட்டுறது

Actor Santhanam: சந்தானத்திற்கு இருந்த மார்க்கெட்டை ஹீரோவாக நடித்து கெடுத்துக் கொண்டார் என்று பல விமர்சனங்கள் எழுந்தது. ஆனாலும் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க மாட்டேன் என்று சந்தானம் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வந்தார். ஆனாலும் அடுத்தடுத்து படம் தோல்வி அடைந்ததால் மீண்டும் காமெடி நடிகனாகவே மாறிவிடலாம் என்ற முடிவையும் எடுத்துவிட்டார்.

அதன்படி இப்போது நிறைய படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் சந்தானம் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் படம் வெளியாகி இருந்தது. திரில்லர் கலந்த காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்து வருகிறார்கள்.

Also Read : பழைய பாணியை வைத்து உருட்டும் சந்தானம்.. தொட முடியாத உயரத்திற்கு சென்ற போட்டி நடிகர்

அதுவும் தோனியின் தயாரிப்பில் வெளியான எல்ஜிஎம் படத்திற்கு போட்டியாக சந்தானம் படம் வெளியான நிலையில் டிடி ரிட்டன்ஸ் படம் தான் வசூலை குவித்து வருகிறது. இதனால் சந்தானம் மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துவிட்டார் என ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கிறார்கள். பத்து ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த தக்காளி திடீரென 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அந்த தக்காளிக்கு வந்த வாழ்வு போல் இப்போது சந்தானத்தின் மார்க்கெட்டும் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து விட்டது. சந்தானம் இதை கொஞ்சம் கூட எதிர்பார்த்து இருக்க மாட்டார். அந்த அளவுக்கு வசூலை வாரி குவித்து வருகிறது. இதனால் தடாலாடியாக தனது சம்பளத்தை சந்தானம் உயர்த்தி இருக்கிறார்.

Also Read : அனைய போகும் நேரத்தில் பிரகாசமாக ஜொலிக்கும் சந்தானம்.. ஹீரோவுக்கு குட் பாய் சொன்ன நேரத்தில் தாறுமாறாக மாறும் அதிர்ஷ்டம்

அதாவது இப்போது 5 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சந்தானம் டிடி ரிட்டன்ஸ் வெற்றிக்கு பிறகு 8 கோடியாக சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். இது தயாரிப்பாளர்களுக்கு பேர் அதிர்ச்சியாக இருக்கிறது. ஒரு படம் ஓடினா இப்படியா செய்வது என புலம்பி வருகிறார்கள்.

மேலும் சந்தானத்தை வைத்து ஏற்கனவே பூஜை போட்ட சில படங்களின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. மேலும் டிடி ரிட்டன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள சந்தானம் பெரிய அளவில் கல்லா கட்ட போகிறார். இவ்வாறு திடீரென தக்காளி வியாபாரி போல் சந்தானத்திற்கும் அதிர்ஷ்டம் கூரையை பிச்சி கொண்டு கொட்டி வருகிறது.

Also Read : எனக்கும் நயன்தாராவுக்கும் எப்படிப்பட்ட உறவு தெரியுமா.? ஓபன் ஆக போட்டு உடைத்த சந்தானம்

Trending News