புதன்கிழமை, ஜனவரி 22, 2025

பழைய பாணியை வைத்து உருட்டும் சந்தானம்.. தொட முடியாத உயரத்திற்கு சென்ற போட்டி நடிகர்

Actor Santhanam: காமெடியனாக தனக்கென ஒரு இடத்தை பிடித்த சந்தானம் இப்போது ஹீரோவாக களமிறங்கி உள்ளார். கடந்த வாரம் இவர் நடிப்பில் உருவான டிடி ரிட்டன்ஸ் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால் ஆரம்பத்தில் இவர் ஹீரோவாக நடித்த ஒரு சில படங்கள் முதலுக்கு மோசம் இல்லை என்னும் அளவுக்கு தல தப்பியது. அதைத்தொடர்ந்து வெளிவந்த பல படங்கள் இவருக்கு தோல்வியை தான் கொடுத்தது. அதனாலயே பலரும் சந்தானம் மீண்டும் காமெடியனாக வந்தால் பிழைத்துக் கொள்வார் என்று வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தனர்.

Also read: அனைய போகும் நேரத்தில் பிரகாசமாக ஜொலிக்கும் சந்தானம்.. ஹீரோவுக்கு குட் பாய் சொன்ன நேரத்தில் தாறுமாறாக மாறும் அதிர்ஷ்டம்

இதற்கு முக்கிய காரணம் அவர் இன்னும் பழைய பாணியை வைத்து தன்னுடைய படங்களை ஓட்டி வருவது தான். விஜய், அஜித் போல் ஹீரோவாக ஜெயிப்பேன் என்று இறங்கிய இவர் பல விஷயங்களில் கோட்டை விட்டு தடுமாறிக் கொண்டிருக்கிறார். அதிலும் முக்கியமாக இவர் தனக்கு போட்டியாக நினைத்தது சிவகார்த்திகேயனை தான்.

ஏனென்றால் இருவருமே விஜய் டிவியிலிருந்து வந்தவர்கள். மேலும் சிவகார்த்திகேயன் கூட ஆரம்பத்தில் காமெடியனாக தான் வருவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த எதிர்பார்ப்பை எல்லாம் பொய்யாக்கிய அவர் இப்போது பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாக தொட முடியாத உயரத்திற்கு சென்று விட்டார்.

Also read: அப்படி இருந்த சந்தானம் இப்படி ஆயிட்டார்.. ஒரே நாளில் 4 பட சூட்டிங், அதிர்ச்சி கொடுத்த சம்பவம்

இருப்பினும் சந்தானம் அவரை ஓவர் டேக் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறார். அது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. ஏனென்றால் சிவகார்த்திகேயன் மக்களின் ரசனையை புரிந்து கொண்டு எது தேவை, எப்படி இருந்தால் ஜெயிக்கலாம் என திட்டம் போட்டு அதை செயல்படுத்தி வருகிறார்.

ஆனால் சந்தானம் எதையும் தெளிவாக திட்டமிடாமல் பழைய பாணியில் காமெடிகளை வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார். அதிலும் இவர் சில படங்களில் பிறரை கிண்டல் செய்வது போன்ற வசனங்களை வைத்து தான் உருட்டிக் கொண்டிருந்தார். இதுதான் இவர் ஹீரோவாக ஜெயிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம்.

Also read: எனக்கும் நயன்தாராவுக்கும் எப்படிப்பட்ட உறவு தெரியுமா.? ஓபன் ஆக போட்டு உடைத்த சந்தானம்

Trending News