திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

குவாட்டர், பிரியாணி, 100 ரூபாய் பணம்.. படத்தை ஓட வைக்க 6 கோடி செலவு செய்த சந்தானத்தின் நண்பர்

Actor Santhanam: கஷ்டப்பட்டு எடுத்த படத்தை ஓட வைக்க வித்தியாசமான ப்ரமோஷன் செய்வதை நாம் பார்த்திருப்போம். அதற்காக லட்சக்கணக்கில் கூட செலவு செய்வார்கள். ஆனால் சந்தானத்தின் நண்பரான பிரபலம் ஒருவர் தன் படத்தை வெற்றி பெற வைக்க 6 கோடி செலவு செய்திருப்பது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

அந்த பிரபலம் வேறு யாரும் கிடையாது சந்தானத்துடன் சில படங்களில் நண்பராக நடித்திருக்கும் பவர் ஸ்டார் சீனிவாசன் தான். பலராலும் ட்ரோல் செய்யப்படும் இவர் தன் வாழ்க்கையில் நடந்த வேதனையான பக்கங்களை ஒரு பேட்டியில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

Also read: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 6 படங்கள்.. சக்கை போடு போட வரும் சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ்

அதாவது பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் தான் இவர் படத்தை தயாரித்து நடிக்க ஆரம்பித்தாராம். அதன்படி லத்திகா படத்தை தயாரித்து வெளியிடும் போது திரையரங்குகளில் கூட்டம் வர வேண்டும் என்பதற்காக இவர் ஒரு வித்தியாசமான யுக்தியை கையாண்டு இருக்கிறார்.

அதாவது படம் பார்க்க வருபவர்களுக்கு குவாட்டர், பிரியாணி, 100 ரூபாய் பணம் என்று செலவு செய்தாராம். இதற்காக மட்டுமே ஆறு கோடி ரூபாய் அவர் செலவு செய்திருக்கிறார். வெற்றியோ தோல்வியோ ஒரு கை பார்த்து விடலாம் என்ற எண்ணம் தான் அப்போது அவருக்கு இருந்திருக்கிறது.

Also read: ஓடிடி-யில் கூட விலை போகாத ஆர்யாவின் 5 படங்கள்.. சந்தானத்தை மலை போல் நம்பி இறங்க காரணம்

அதனாலேயே இப்படி ஒரு ரிஸ்க் எடுத்து தனக்கு தானே போஸ்டர் அடித்து ஒட்டி ப்ரமோஷனும் செய்திருக்கிறார். ஆனால் அத்தனையும் வீணாக போனது தான் மிச்சம். அவர் எதிர்பார்த்தபடி படம் ஓடவில்லை. இருந்தாலும் அவர் நடிப்பு ஆசையில் தனக்கு சொந்தமான மருத்துவமனை, டிரஸ்ட் உள்ளிட்டவற்றை சொந்தக்காரர்களின் பொறுப்பில் ஒப்படைத்து இருக்கிறார்.

அதனாலேயே பல நஷ்டங்களை சந்தித்த அவர் தற்போது மிகவும் கஷ்டப்பட்டு வருவதாக கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் நம்பியவர்களே பணத்திற்காக தன் முதுகில் குத்தி விட்டதாகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இவ்வாறு பப்ளிசிட்டிக்காக கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்த பவர் ஸ்டார் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருகிறார்.

Also read: கிக் திரைப்படத்தால், சந்தானத்திற்கு மானக்கேடு.. அவமானத்தை வெளிச்சம் போட்டு காட்டிய ப்ளூ சட்டை

Trending News