வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

ரியல் கமர்சியல் கிங் ஆக மாறிய சந்தானம்.. நயன்தாராவை கலாய்த்த இங்க நான்தான் கிங் டிரைலர்

Santhanam : சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தது. இதை தொடர்ந்து சந்தானம் நடித்திருக்கும் படம் தான் இங்கு நான் தான் இங்கு.

ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தம்பி ராமையா, பாலசரவணன், மனோபாலா, பிரியாலயா மற்றும் பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் டீசர் வெளியாகி இப்போது ரசிகர்களின் கவனத்தைப் பெற்று இருக்கிறது.

அதாவது திருமணம் ஆகவில்லையே என்று மிக கவலையில் இருந்த சந்தானம் தேடிப்பிடித்த ஒரு பெண்ணை திருமணம் செய்கிறார். பெண்ணின் மொத்த குடும்பத்தாலும் அதன் பிறகு சந்தானம் சந்திக்கும் பிரச்சனையை கலகலப்புடன் சொல்லி இருக்கிறது இங்கு நான்தான் கிங் படம்.

நயன்தாராவை கலாய்த்த சந்தானம்

டிரைலரிலேயே பல பிரபலங்களை கலாய்க்கும் படி சந்தானத்தின் டயலாக் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி நடிகர் சங்கம் கட்டிட்டு தான் திருமணம் செய்வேன் என்று சொல்ல நான் ஒன்னும் விஷால் இல்லை.

கல்யாணமே வேண்டாம்னு சொல்றதுக்கு நான் சிம்புவும் இல்ல இன்று கலாய்த்து தள்ளி இருக்கிறார். இவ்ளோ பிரமாண்டமா கல்யாணம் பண்ணுவேன்னு தெரிஞ்சா அதை வீடியோ கவரேஜ் பண்ணி நெட்பிளிக்ஸ்ல விற்று இருக்கலாம் என
நயன்தாராவையும் சேர்த்து டேமேஜ் செய்திருக்கிறார்.

ஏனென்றால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்பிளிக்ஸுக்கு விற்கப்பட்ட நிலையில் காலதாமதம் ஆனதால் இது கைவிடப்பட்டது. மேலும் இங்க நான்தான் கிங் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனம் பெற்றுள்ள நிலையில் படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

Trending News