Vadakkupatti Ramasamy Movie Review: கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் வடக்குப்பட்டி ராமசாமி இன்று வெளியாகி உள்ளது. முதல் முறையாக அதிக ஸ்கிரீன்களில் திரையிடப்பட்ட சந்தானத்தின் படமாகவும் இது இருக்கிறது.
ஏற்கனவே ட்ரைலர் மூலம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த சந்தானத்திற்கு இப்படம் ஒர்க்கவுட் ஆனதா என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் இங்கு காண்போம். சிறுவயதிலிருந்தே கடவுள் நம்பிக்கை இல்லாமல் வளரும் சந்தானம் ஒரு கட்டத்தில் மக்களின் மூடநம்பிக்கையை வைத்து காசு பார்க்க ஆரம்பிக்கிறார்.
ஒரு சூழலில் சந்தானம் தன்னுடைய சொந்த நிலத்தில் கோவில் கட்டி மக்களை ஏமாற்றி சம்பாதிக்கிறார். அப்போது ஊருக்கு வரும் தாசில்தார் அதை வைத்து வேறு வழியில் பணம் பார்க்க ஆசைப்படுகிறார். சந்தானம் அதற்கு ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒரு பிரச்சனை தலை தூக்குகிறது. அதனால் கோவிலை பூட்டி சீல் வைக்கும் நிலையும் வருகிறது.
Also read: அடிமேல் அடிவாங்கும் சந்தானம்.. கமுக்கமாக நண்பனுக்கு டிமிக்கி கொடுத்த உதயநிதி
இதனால் சந்தானம் ஒரு பிளானை போட்டு கோவிலை திறக்க முயற்சி செய்கிறார். அவருடைய முயற்சி பலித்ததா? தாசில்தார் என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் கிளைமேக்ஸ். வழக்கம்போல சந்தானம் நக்கல், நையாண்டி என வடக்குப்பட்டி ராமசாமி ஆக ரசிக்க வைத்திருக்கிறார்.
மேஜராக வரும் நிழல்கள் ரவி, கோவில் பூசாரி ஆக வரும் சேஷூ என அனைவரும் தங்களுக்கான வேலையை கச்சிதமாக செய்து இருக்கின்றனர். இதில் ஹீரோயின் மேகா ஆகாஷ் ஒரு சில இடங்களில் மட்டுமே தலையை காட்டுகிறார். பெரிய அளவில் அவருக்கு வேலை இல்லை.
Also read: இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் 25 படங்கள்.. போட்டி போட்டு வெளியிடும் நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார்
அதேபோல் சில இடங்களில் இருக்கும் லாஜிக் மீறல்கள் ஒரு சில கேள்விகளை உருவாக்குகிறது. ஆனால் படம் முழுக்க காமெடி ரகளையாக இருப்பது அதையெல்லாம் மறக்கடித்து விடுகிறது. அந்த வகையில் சந்தானத்திற்கு இந்த வருடம் சிறப்பாகவே ஆரம்பித்து இருக்கிறது. ஆக மொத்தம் இந்த வடக்குப்பட்டி ராமசாமி குடும்பத்தோடு பார்க்கும்படியான பக்கா என்டர்டெயின்மென்ட் படமாக உள்ளது.
சினிமா பேட்டை ரேட்டிங்: 3.25/5