வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

பற்ற வைத்த தோழி, பத்ரகாளியான காதலி.. சாந்தனுவின் 8 வருட பிரேக் அப் சீக்ரெட்

இயக்குனர் பாக்யராஜின் மகனாக வாரிசு நடிகர் என்ற அடையாளத்தோடு அறிமுகமான சாந்தனு இன்னும் வளர்ந்து வரும் ஒரு நடிகராகவே இருக்கிறார். பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவர் தனக்கான ஒரு வெற்றிக்காக போராடி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் நடிப்பில் வெளிவந்துள்ள ராவண கோட்டம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் அவர் தன்னுடைய எட்டு வருட பிரேக் அப் பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். அதாவது பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் கீர்த்தியும் இவரும் சிறு வயதிலிருந்து நண்பர்களாக பழகி பின் காதலிக்க ஆரம்பித்தது அனைவருக்கும் தெரியும். அதைத்தொடர்ந்து இவர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

Also read: 6 மாத குழந்தையாக நடித்திருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்.. பாக்யராஜின் எந்த படம் தெரியுமா?

அந்த வகையில் இவர்கள் இருவரும் தற்போது க்யூட்டான நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் காதலிக்கும் காலத்தில் இவர்களுக்குள் அடிக்கடி ஏதாவது ஒரு சண்டை வந்து கொண்டே இருக்குமாம். அப்படித்தான் ஒரு முறை சிறு பிரச்சனை காரணமாக இருவரும் சில நாட்கள் பேசாமல் இருந்திருக்கின்றனர்.

அப்போது சாந்தனு தன்னுடைய நீண்ட நாள் தோழியை எதார்த்தமாக சந்தித்து இருக்கிறார். அதை தொடர்ந்து இருவரும் காபி ஷாப்பில் மீட் செய்து கேஷுவலாக பேசினார்களாம். இதை அந்த காபி ஷாப்பிற்கு வந்திருந்த கீர்த்தியின் தோழி பார்த்துவிட்டு சரியாக அவரிடம் பற்ற வைத்திருக்கிறார். ஏற்கனவே சாந்தனு மேல் அவர் ஏகப்பட்ட கடுப்பில் இருந்திருக்கிறார்.

Also read: 80-களில் கமலை மிஞ்சிய சம்பளம் வாங்கிய பாக்யராஜ்.. டாப் 6 நடிகர்களின் சம்பள லிஸ்ட்

அது மட்டுமல்லாமல் இயல்பாகவே ஒரு பொசசிவ் குணமும் அவருக்கு இருந்திருக்கிறது. அதனால் கீர்த்தி பத்ரகாளி அவதாரம் எடுத்திருக்கிறார். மேலும் இந்த விஷயத்தை பெரிதுபடுத்தி இருவரும் மன நிம்மதி தான் முக்கியம் என்று பிரேக்கப் செய்து பிரிந்து விட்டார்களாம். இப்படி 8 வருடம் கழிந்த நிலையில் அவ்வப்போது ஹாய், பாய் சொல்வதோடு அவர்களின் நட்பு தொடர்ந்திருக்கிறது.

அப்பொழுதுதான் ஒரு முறை டான்ஸ் ஷோவுக்காக ரிகர்சல் செய்த போது இவர்களுக்குள் மீண்டும் காதல் பற்றி இருக்கிறது. ஏனென்றால் அப்போது அவர்களின் நண்பர்கள் கமலின் பாடல்களை போட்டு உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள். அதன் பிறகு தான் மீண்டும் இவர்கள் காதலிக்க ஆரம்பித்து திருமணம் செய்து கொண்டார்களாம். இந்த ரகசியத்தை சாந்தனு இப்போது வெளிப்படையாக தெரிவித்து இருப்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.

Also read: டி.ராஜேந்தர், பாக்யராஜ் போல வளர முடியாமல் போன நட்சத்திரம்.. பன்முகத் திறமை இருந்தும் புகழடையாமல் போன பரிதாபம்

Trending News