வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

கர்ணன் மாதிரி ஒரு ஹிட்டு கொடுத்த மனுஷனுக்கு வாய்ப்பு தர மறுக்கும் 3 இயக்குனர்கள்.. என்ன கொடுமை நாராயணா!

பிரபல இசையமைப்பாளராக இருக்கும் சந்தோஷ் நாராயணன் இதுவரை பல ஹிட் பாடல்களை நமக்கு கொடுத்திருக்கிறார். இதனாலேயே அவர் திரையுலகில் வெகுவிரைவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதிலும் இவருடைய இசையில் வெளிவந்த கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கண்டா வர சொல்லுங்க என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.

அதைத்தொடர்ந்து சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் வடிவேலு நடிப்பில் உருவாகி இருக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். மேலும் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வரும் அனல் மேலே பனித்துளி என்ற படத்திற்கு இசையமைத்துள்ள சந்தோஷ் நாராயணனுக்கு தமிழில் வேறு எந்த வாய்ப்புகளும் இதுவரை கிடைக்கவில்லை.

Also read: விக்ரம் 61 படத்தை இயக்கும் ரஞ்சித்.. ஆனால் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கிடையாதாம்

அது மட்டுமல்லாமல் சமீபத்தில் இவருடைய மகளும், பாடகியுமான தீ பாடிய குக்கூ பாடல் பல சர்ச்சையில் சிக்கியது. கடந்த வருட மார்ச்சில் வெளியான இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் உருவான இந்த பாடலை தீ-யுடன் இணைந்து ராப் பாடகர் அறிவு பாடியிருந்தார்.

மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்த பாடல் சில சர்ச்சைகளையும் சந்தித்தது. அதாவது தீ-யுடன் இணைந்து பாடிய அறிவுக்கு உரிய மரியாதையை கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இப்பாடலை சந்தோஷ நாராயணனுடன் இணைந்து இவர் இசையமைத்தது மட்டுமில்லாமல் பாடல் வரிகளையும் அவர்தான் எழுதினார்.

Also read: சந்தோஷ் நாராயணனை நீக்கிவிட்டு மூத்த இசையமைப்பாளருடன் கூட்டணி சேர்ந்த பா ரஞ்சித்.. இனி அதிரடிதான்!

இப்படி சில பல பிரச்சனைகளை சந்தித்தாலும் அதை சந்தோஷ் நாராயணன் சுலபமாக சமாளித்தார். இந்நிலையில் அவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் வராததால் வெளியில் எங்கும் தலை காட்டாமல் ஒதுங்கி இருக்கிறாராம் திரையுலகில் அவருக்கு நெருங்கிய நண்பர்களாக இருக்கும் மூன்று இயக்குனர்கள் கூட இப்போது வாய்ப்புகள் தரவில்லையாம்.

அந்த வகையில் பா ரஞ்சித் தற்போது இயக்கி வரும் தங்கலான் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷை இசையமைக்க வைத்துள்ளார். அதே போன்று மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். மேலும் ராஜுமுருகன் இயக்கி வரும் ஜப்பான் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படி அவருடைய மூன்று நண்பர்களும் வேற இசையமைப்பாளர்களை தங்கள் படத்திற்கு புக் செய்துள்ளார்கள். இதனால் நண்பர்கள் கூட அவரை மறந்து விட்டதாக திரையுலகில் ஒரு பரபரப்பு பேச்சு அடிபட்டு வருகிறது.

Also read: சந்தோஷ் நாராயணன் செய்த தில்லு முல்லு.. கடுப்பில் பிரிந்துபோன பா ரஞ்சித்

Trending News