பிசாசு 2வில் இணைந்த சார்பட்டா ராமன். சமீபத்தில் வெளியாகவி பட்டையை கிளப்பும் படம் “சார்பட்டா பரம்பரை”. வழக்கம் போல் வடசென்னைக்கு வாக்கு சேர்க்கும் பா.ரஞ்சித் இந்த படத்திலும் மிரட்டி இருப்பார்.
சுதந்திரத்திற்கு முன் பின் என ஆங்கில குத்துச்சண்டை போட்டியையும் அப்போதய மக்களின் வாழ்வியல் முறைகளையும் அழகாக காட்டியிருப்பார். அப்போது வளர்ந்து வந்த திமுக அதிமுக எமர்ஜென்சி காலத்திலான நடப்பு என அத்தனையும் உணர்வின் உச்சத்திற்கே கொண்டு சென்று சேர்த்திருப்பார்.
மதுரையை பற்றி பேச எத்தனையோ தமிழ் இயக்குனர்கள் இருக்கலாம் இருந்தாலும் பா.ரஞ்சித்திற்கு நிகராக வடசென்னை வாழ்வியலை எவராலும் காட்டியிருக்க முடியாது. சார்பட்டாவின் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் கவனம் ஈர்த்திருக்கும் ரங்கன் வாத்தியார் கபிலன் ராமன் டான்சிங் ரோஸ் வேம்புலி டாடி ராமன் என அத்தனையும் அவரவர் பங்குகளுக்கு சிறப்பு சேர்த்திருப்பர்.
இந்த வகையில் ஏறத்தாழ 10 ஆண்டுகளாய் தமிழ் சினிமாவில் ஒரு அடிப்படைக்காக காத்திருந்த சந்தோஷ் பிரமோத் (ராமன்)க்கு அடித்தது லக்கி கிக் தான. இப்போது இயக்குனர் மிஷ்கின் பிசாசு2 படத்தின் கேரக்டர் செலக்சனில இருந்து வரளகிறார் ராமன் கேரக்டர் பிடித்து விடவே இப்போது சந்தோசையும் புக்கங் செய்துள்ளார் மிஷ்கின்
ஏற்கனவே இந்தபடத்தில் ஆண்ட்ரியா மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிசாசு2க்கு ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிட தக்கது. வழக்கமாகவே மிஷ்கின் படத்தில் விருவிருப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது என்பது ரசிகர்கள் அத்தனையும் அறிந்த ஒன்றே.
அதே போல படத்தின் டுவிஸ்டுகளும் வேறலெவலில் இருக்கும் ராமனோ பவாணியே இருவரும் சிறந்த வில்லன்களே