சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகை தொடர்ந்து தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் நடிப்புத் திறமையும் தாண்டி அவர் அழகாக இருக்க வேண்டும். ஆனால் தமிழ் சினிமா அதற்கு சற்று விதிவிலக்கானது. ஏனென்றால் இங்கு திறமைக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க முடியும்.
அந்த வகையில் ஷோபா, சரிதா, ராதிகா போன்ற நடிகைகள் சினிமாவில் தங்கள் நிறத்தையும் தாண்டி திறமையால் சாதித்தவர்கள். அப்படி ஒரு நடிகைதான் சரண்யா ரவிச்சந்திரன். தமிழில் ஏராளமான குறும் படங்களில் நடித்துள்ள இவர் ஆட்டோ சங்கர் என்ற குறும்படத்தின் மூலம் அதிக அளவில் பிரபலம் ஆனார்.
அதை தொடர்ந்து இவர் சினிமாவில் காதலும் கடந்து போகும், வடச்சென்னை, இறைவி, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு ஹீரோவாக நடித்த மண்டேலா திரைப்படத்திலும் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் இவர் உடல் எடையை குறைத்து வெளியிட்டிருந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் திரைப்படங்களில் பக்கா கிராமத்து தோற்றத்தில், மிகவும் டல் லுக்கில் இருக்கும் இவர் நிஜத்தில் அல்ட்ரா மாடர்னாக வலம் வருகிறார்.
நிஜத்தில் கலர் கம்மியாக இருக்கும் இவர் தற்போது வெள்ளையாக மேக்கப் போட்டு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் அவர் நம்ப முடியாத அளவிற்கு முற்றிலும் வேறுபட்டு இருக்கிறார். இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சரண்யா மிகவும் அழகாக இருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.

திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட சரண்யா ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். தன் வாழ்க்கையில் ஏற்பட்ட பல தடைகளையும் தாண்டி இன்று அவர் கருப்பு நிறத்தழகியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் வலிமை திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.