வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கொரோனாவில் இருந்து மீண்ட பின்னும் 35 வயது நடிகை திடீர் மரணம்.. பெரும் சோகத்தில் திரையுலகம்

பச்சை என்கிற காத்து படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை சரண்யா சசி. கடந்த 10 ஆண்டுகளாக மூளைக் கட்டியை எதிர்த்து போராடி வந்த நிலையில் தற்பொழுது சிகிச்சை பலனின்றி காலமானார்.

மலையாளத்தில் ஒரு சில படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து பிரபலமானவர் சரண்யா சசி. தற்போது 35 வயதாகும் இவருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து எட்டுமுறை இவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மலையாள நடிகர் சங்கம் தேவையான உதவிகளை செய்து வந்தது.

மூளையில் புற்றுநோய் கட்டி ஏற்பட்ட நிலையில், கொரோனா தொற்று பாதிப்பும் ஏற்பட்டது. எனவே கடந்த மே மாதம் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோவிட் மற்றும் பிற தொடர்புடைய பிரச்சனைகளில் இருந்து மீண்ட பிறகும், இவருக்கு இரத்தத்தில் சோடியம் அளவு குறைவாக இருப்பதாலும், நிமோனியா காரணமாகவும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

saranya sasi
saranya sasi

இருப்பினும் தொடர்ந்து அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று திடீரென சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவரது மறைவிற்கு மலையாள திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இவர் மந்திரகொடி, ஹரிச்சந்தனம், சீதா போன்ற சீரியல்களிலும், சோட்டா மும்பை, தளப்பாவு, பம்பாய் மற்றும் சாக்கோ ரண்டமான் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது, இவருடைய மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Trending News