வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பழுவேட்டரையரை நெற்றி பொட்டில் அடித்தாற்போல் கேட்ட கேள்வி.. ஆவேசத்துடன் பதிலளித்த சரத்குமார்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இத்திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களான வந்தியத்தேவன், குந்தவை, நந்தினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இவர்களோடு பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமாரும், சிறிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் பார்த்திபனும் நடித்து அசத்தினர். இதில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத்குமாருக்கு ஜோடியாக நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யாராய் நடித்திருப்பார்.

Also read: வாய்ப்பு கொடுத்தவரை அடிக்க மறுத்த சரத்குமார்.. 32 வருட ரகசியத்தை உடைத்த சம்பவம்

பொன்னியின் செல்வன் நாவலில் கல்கி எழுதிய படியே பெரிய பழுவேட்டரையரின் மனைவியாக நந்தினி கதாபாத்திரம் இடம்பெற்றிருக்கும். அதுபோலவே மணிரத்னமும் இப்படத்தில் இயக்கியிருப்பார். இந்நிலையில் சரத்குமாரிடம் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடித்த தருணத்தைப் பற்றி கேள்வி எழுப்பிய போது தான் ஒரு ஆணழகன் என்பதால் ஐஸ்வர்யாராய்க்கு தனக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்தது என்று அவர் தெரிவித்தார்.

நடிகர் சரத்குமாரின், இந்த பேச்சு சமூக வலைத்தளத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தினாலும் உண்மையிலேயே சரத்குமார் ஒரு ஆணழகன் என்பதால் அவரது பேச்சு பெரிய அளவில் விமர்சனத்துக்கு உள்ளாகவில்லை. ஆனால் அண்மையில் சரத்குமாரின் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு விளம்பரம் குறித்த ஒளிபரப்பு அதிக அளவில் நடந்து வருகிறது.

Also read: விஜய்யை உச்சாணிக் கொம்பில் வைத்து பாராட்டிய சரத்குமார்.. வாரிசு படம் இப்படித்தான் இருக்கும்

இதனால் சரத்குமார் பொன்னியின் செல்வன் திரைபடத்தில் காண்பிக்கப்படும் காட்சிகளிலெல்லாம் ரம்மி சரத்குமார் என்றே அவரை அழைத்து நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். இதனிடையே இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது, அரசாங்கம் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை நிறுத்தினால் நானும் அதில் நடிப்பதை நிறுத்துவேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கம் மது அருந்துவது தவறு என சொல்கிறது. ஆனால் அதே அரசாங்கமே டாஸ்மாக் கடைகளை முன்னெடுத்து நடத்துகிறது. இதையெல்லாம் அவர்களிடம் கேட்பதை விட்டுவிட்டு தன்னிடம் வந்து கேட்பது சரியானதல்ல என சரத்குமார் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

Also read: சரத்குமார், சத்யராஜ் வில்லனில் இருந்து ஹீரோவாக மாறினாங்க.. ஆனா ஹீரோவாக இருந்து விலனாக மிரட்டிய ஒரே நடிகர்

Trending News