CWC 5: பிரியங்கா மற்றும் மணிமேகலை பிரச்சனை இப்போது தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்சனை போல போய்க்கொண்டிருக்கிறது. விஜய் டிவி பிரபலங்கள் யார் வெளியே வந்தாலும் உடனே பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் இதுகுறித்து கேள்வியை தான் முன்வைக்கின்றனர்.
ஏற்கனவே குரேஷி, புகழ் போன்ற பல பிரபலங்கள் பிரச்சனை குறித்து பேசி இருந்தனர். இந்த சூழலில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த ஐந்து சீசன்களாக கோமாளியாக பங்கு பெற்று வருபவர் தான் சரத். இவர் சட்டம் என் கையில் என்ற படத்தின் ப்ரோமோஷனுகாக வந்திருந்தார்.
அப்போது பிரியங்கா மற்றும் மணிமேகலை சண்டையின் போது செட்டில் சரத்தும் இருந்ததால் அங்கு என்ன பிரச்சனை நடந்தது என்று கேட்கப்பட்டது. இது நமக்கு தேவை இல்லாத விஷயம், ஒருத்தவுங்க வீடியோ போட்டு அதன் மூலம் நல்ல சம்பாதிச்சிட்டாங்க. இன்னொருத்தவங்க நல்லா சம்பாதிக்கிறாங்க.
மணிமேகலை, பிரியங்கா பிரச்சினை பற்றி பேசிய சரத்
இதுல நமக்கு ஒன்றுமே கிடையாது இது நாட்டுக்கு முக்கியமானது இல்லை என்று சரத் கூறியிருக்கிறார். சமீபத்தில் பிரியங்காவின் ஆதரவாளர்களை விமர்சிக்கும் படி மணிமேகலை போட்ட வீடியோவில் சொம்பு வைத்து கலாய்த்திருந்தனர்.
அதையும் சரத் குறிப்பிட்டு சொம்புல அடி வாங்கவா என்று கூறியிருந்தார். மேலும் பத்திரிகையாளர்கள் இது விஜய் டிவியின் டிஆர்பிக்காக நடந்த நாடகமா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சரத், அவர்களின் தனிப்பட்ட யூடியூப் சேனலுக்கான டிஆர்பியை ஏற்றுவதற்காக செய்தது.
இன்றைக்கு இரண்டு பேரும் அடித்துக் கொண்டால், நாளைக்கு சேர்ந்து கொள்வார்கள். அதனால் நமக்கு ஒன்னும் வரப்போவதில்லை என்று சரத் குறிப்பிட்டுள்ளார். மேலும் விஜய் டிவி பிரபலங்கள் போல் சரத்தும் இப்போது பிரியங்காவுக்கு தான் சப்போர்ட் செய்கிறார் என மணிமேகலை ஆதரவாளர்கள் திட்டி கமெண்ட் செய்துள்ளனர்.
முடிவில்லாமல் போகும் பிரியங்கா, மணிமேகலை சண்டை
- பிரியங்கா vs மணிமேகலை, இதெல்லாம் தானா அடங்கிடும்
- விஜய் டிவியின் 5 முக்கிய தொகுப்பாளர்கள் வாங்கும் சம்பளம்
- ஆண்டவர் இல்லாத பிக்பாஸ் 8, துண்டு போட்ட பிரியங்கா