ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

போர் தொழிலுக்கு பிறகு வேட்டையாடத் தொடங்கிய சரத்குமார்.. நடுங்க வைக்கும் பரம்பொருள் ட்ரெய்லர்

Actor Sarathkumar: 80, 90 களில் ஹீரோவாக நடித்து வந்த சரத்குமார் தற்போது வரை இவருடைய உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து ஹீரோக்கு டஃப் கொடுக்கும் வகையில் செகண்ட் இன்னிங்ஸில் இவருடைய இமேஜை தக்க வைத்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் வாரிசு பொன்னின் செல்வன் மற்றும் சமீபத்தில் திரில்லர் படமாக வெளிவந்த போர் தொழில் படங்களில் இவருடைய தனித்துவமான நடிப்பை வெளிக்காட்டி நடித்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து இவருக்கு பல வாய்ப்புகள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தேடிக் வருகிறது. இதனால் இதை சரியாக பயன்படுத்தி மக்கள் மத்தியில் இவருக்கான இடத்தை தற்போதும் நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ட்ராங்கான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.

Also read: 30 வருடத்திற்கு பிறகு வெளிவரும் இரண்டாம் பாகம்.. சரத்குமார் நிராகரித்து இன்று வரை ஏங்கும் சூப்பர் ஹிட் மூவி

அந்த வகையில் போர் தொழில் படத்திற்கு பிறகு தற்போது பரம்பொருள் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை அரவிந்த் ராஜ் இயக்கியிருக்கிறார். கவி கிரியேஷன் இப்படத்தை தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.

எப்படி போர் தொழில் படத்தில் மர்ம கொலையாளியை கண்டுபிடிக்கும் விதமாக இன்வெஸ்டிகேஷன் செய்கிறாரோ அதே மாதிரி பரம்பொருள் படத்திலும் போலீஸ் அதிகாரியாக சிலை கடத்தும் நபரை கண்டுபிடிக்கும் கதாபாத்திரத்தில் சரத்குமார் இவருடைய வேட்டையை ஆரம்பித்திருக்கிறார்.

Also read: சரத்குமார் சங்கை பிடித்த இருவர்.. இக்கட்டான சூழ்நிலையில் சங்கரை விட்டுக் கொடுத்த சுப்ரீம் ஸ்டார்

முக்கியமாக நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும், குற்றவாளிடமே ஒரு பொறுப்பை ஒப்படைத்து அவர் மூலமாக சிலை கடத்தும் நபரை கண்டுபிடிக்கும் திரில்லிங்கான கதையாக பரம்பொருள் படம் நகர்கிறது. இப்படத்தில் ட்ரெய்லரை பார்க்கும் பொழுது கண்டிப்பாக சரத்குமாருக்கு வெற்றியடையும் என்பது உறுதியாகிவிட்டது.

இப்படி தொடர்ந்து ரீ என்ட்ரி மூலம் சரத்குமார் சரியான படங்களை தேர்ந்தெடுத்து தரமான நடிப்பை கொடுத்து மக்கள் நாயகனாக இடம் பிடித்து வருகிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படம் வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது.

சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள பரப்பொருள் ட்ரெய்லர்

Also read: சரத்குமார் போல் காசுக்காக சூர்யா செய்த காரியம்.. கங்குவா வீடியோவால் வெடிக்கும் சர்ச்சை

Trending News