திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

Hit List Trailer: பதப்பதைக்க வைக்கும் சைக்கோ கொலைகாரன்.. மிரட்டும் சரத்குமாரின் ஹிட்லிஸ்ட் ட்ரைலர்

சமீபகாலமாக தொடர்ந்து சரத்குமார் வித்யாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் அவருடைய மிரட்டலான நடிப்பில் இப்போது ஹிட்லிஸ்ட் படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.

இயக்குனர் விக்ரமனின் மகனான விஜய் கனிஷ்கா ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் சூர்யா கதிர் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் இயக்கியிருக்கின்றனர். கே எஸ் ரவிக்குமார் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.

மேலும் கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரகனி, ரெடின் கிங்ஸிலி, முனிஸ்காந்த் போன்றோர் பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். அதாவது ராட்சசன் படத்தை மிஞ்சும் அளவுக்கு ஒரு சைக்கோ கொலைகாரனின் வெறிபிடித்த ஆட்டமாக தான் இந்த படம் இருக்கிறது.

யார் அந்த சைக்கோ கொலைகாரன், அடுத்தடுத்த கொலைக்கான காரணம் என்று தெரியாமல் போலீஸ் அதிகாரியாக இருக்கும் சரத்குமார் ஒவ்வொரு காட்சிகளிலும் திணறுகிறார். கௌதம் மேனன் வில்லனுக்கு உண்டான தோரணையில் வசனங்களை பேசுகிறார்.

மேலும் ராட்சசன், போர் தொழில் போன்ற வரிசையில் ஹிட்லிஸ்ட் படமும் இடம்பெறும் என்பது இந்த ட்ரெய்லரை வைத்து பார்க்கும் போது தெரிகிறது. மேலும் டிரைலரே ரசிகர்களை பதப்பதைக்க வைத்த நிலையில் படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் அதிகரித்திருக்கிறது.

Trending News