100 நாட்களுக்கு மேல் ஓடிய சரத்குமார் படங்கள்
வில்லனாக அறிமுகமான சரத்குமார் தொடர்ந்து தன சொந்த முயற்சி மூலம் நல்ல நடிகராக பெயர் பெற்று ஹீரோவாக வெற்றி பெற்று இன்று ஒரு அரசியல்வாதியாக இருக்கிறார். 1974-இல் சரத்குமார் பாடி பில்டிங்கில் மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் பெற்றவர்.
புலன் விசாரணை
ஆர்கே செல்வமணி இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் புலன் விசாரணை. இப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ராதாரவி மற்றும் சரத்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் சரத்குமார் ஒரு நல்ல வெற்றியை தேடிக் கொடுத்தது.
நாட்டாமை
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் நாட்டாமை. இப்படத்தை ஆர்பி சவுத்ரி தயாரித்துள்ளார். இப்படத்திற்கு சிற்பி இசையமைத்துள்ளார். மீனா, குஷ்பூ, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர். இந்த படமும் சரத்குமாருக்கு ஒரு நல்ல வெற்றியை தேடிக் கொடுத்தது. இந்த படத்தின் இரண்டாவது ஹீரோ கவுண்டமணி, செந்தில். இந்த படத்தை தெலுங்கில் பெத்தராயுடு என்ற பெயரில் ரஜினி நடித்தார். அங்கயும் மாபெரும் வெற்றி பெற்றது.
வேடன்
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் வேடன். இப்படத்தில் குஷ்பூ, சேரன்ராஜ், ராதாரவி மற்றும் சார்லி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். இப்படமும் சரத்குமாருக்கு ஒரு நல்ல வெற்றியை தேடிக் கொடுத்தது.
வசந்தகால பறவை
பவித்திரன் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் வசந்தகால பறவை. இப்படத்தில் ரமேஷ் அரவிந்த், கவுண்டமணி, ராஜ் பி தேவ் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். இந்தப்படமும் சரத்குமாருக்கு ஒரு நல்ல வெற்றியை தேடிக் கொடுத்தது.
நேதாஜி
மூர்த்தி கிருஷ்ணா இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் நேதாஜி. இப்படத்தில் மணிவண்ணன், சரண்ராஜ், பாபு ஆண்டனி, செந்தில் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். சரத்குமாருக்கு நல்ல வெற்றியை தேடிக் கொடுத்தது.
சூரியவம்சம்
விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் சூரியவம்சம். இப்படத்தில் மணிவண்ணன், ராதிகா, தேவயானி இவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எஸ் ஏ ராஜ்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் சரத்குமாருக்கு ஒரு நல்ல வெற்றியை தேடிக் கொடுத்தது. ஹிந்தியிலும் அமிதாபச்சனை வைத்து ரீமேக் செய்தார்கள். இந்த கால கட்டத்தில் இயக்குனர் விக்ரமனின் அனைத்து படங்களும் வெற்றி.
கேப்டன்
கொடி ராமகிருஷ்ண இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் கேப்டன். ரகுவரன், சுகன்யா, ரஞ்சிதா, தேவன், சுதா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சிற்பி இசையமைத்துள்ளார். இப்படம் சரத்குமாருக்கு ஒரு நல்ல வெற்றியைத் தேடிக் கொடுத்தது.
அரண்மனை காவலன்
செல்வவிநாயகம் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் அரண்மனை காவலன். இப்படத்தில் ரகுவரன், சிவரஞ்சனி, விஜயகுமார், கவுண்டமணி மற்றும் கவிதா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் இப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். இப்படமும் சரத்குமாருக்கு ஒரு நல்ல வெற்றியை தேடிக் கொடுத்தது. சிவரஞ்சனி முன்னணி நடிகையாக கலக்கி கொண்டிருந்த காலம்.
- 175 நாட்களுக்கு மேல் ஓடிய விஜயகாந்த் படங்கள்- பாகம் 1
- அப்பாவுக்கு ஜோடியாக நடித்த நடிகைகளின் மகள்கள் மகனுக்கு ஜோடியாக
- தமிழ் ஹீரோக்கள் நடித்த முதல் படங்கள்.. யார் வெற்றி அடைந்தார்கள்..