புலன் விசாரணை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் விஜயகாந்த்தினால் அறிமுகப்படுத்தப்பட்டவர் சரத்குமார். இவர் நடிப்பில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற சூரியன், நாட்டாமை, கட்டபொம்மன், அரண்மனை காவலன், அரசு, சென்னையில் ஒரு நாள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
2021 ஆம் ஆண்டு அடங்காதே, பொன்னியின் செல்வன் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். பல போராட்டங்களுக்குப் பின் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை பிடித்தார் சரத்குமார்.
வில்லனாக களமிறங்கி பின் விஜயகாந்தின் அறிவுறுத்தலின் பேரில் நடிகனாக வெற்றியும் கண்டார் சரத்குமார். இவர் சினிமா வாழ்க்கையில் கிட்டத்தட்ட 4 பேரை காதலிக்க ஆசை பட்டுள்ளார்.
அதில் முதலிடத்தில் நக்மா, இரண்டாமிடத்தில் ஹீரா, தேவயானி மற்றும் ராதிகா உள்ளனர். இதில் ஹீரா அஜித்தின் முதல் காதலி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு இவர்கள் மீது கொள்ளை பிரியமாம் சரத்குமாருக்கு.
இந்த வயதிலும் உடம்பை கட்டு கோப்பாக வைத்து தன்னுடைய ரசிகர் பட்டாளத்தை அப்படியே மெயின்டெயின் செய்து வருகிறார் சரத்குமார். எம்ஜிஆரை பார்த்து அரசியல் கற்றுக் கொண்ட சரத்குமார் தனக்கென்று தனித்த நிற்பதற்காக ஒரு கட்சியும் ஆரம்பித்தார்.
அந்தக் கட்சிக்கு ஆல் இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்று பெயரிட்டு தேர்தலில் கூட்டணியில் இறங்கினார் தற்போது வரை அரசியலிலும் போராடிக் கொண்டிருக்கின்ற சரத்குமார்.