வியாழக்கிழமை, நவம்பர் 28, 2024

சூரியவம்சம் படத்தில் சரத்குமாரை கோபப்படுத்திய விக்ரமன்.. வேட்டியை கழற்றி தூக்கி வீசிட்டு போன சம்பவம்

தமிழ் சினிமாவில் சரித்திர சாதனை படைத்த திரைப்படங்களில் ஒன்று சூரிய வம்சம். கதையே பிடிக்காமல் படத்தை தயாரித்தவர் ஆர்பி சௌத்ரி. ஆனால் அவரையே பிரமிக்க வைத்த படமாக மாறியது. இன்று வரை தமிழ் சினிமாவில் அதிகம் பேர் தியேட்டரில் சென்று பார்த்த படமாக சூரியவம்சம் சாதனை செய்துள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.

விக்ரமன் மற்றும் சரத்குமார் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் சூரிய வம்சம். இன்றும் பல மீம்ஸ் கிரியேட்டர்கள் இந்த படத்தை வைத்து பல மீம்ஸ் போட்டு ரசிகர்களை இணைய தளங்களில் குஷிப்படுத்தி வருகின்றனர்.

சூரியவம்சம் படம் வெளியாகி 25 வருடங்களான நிலையில் சமீபத்தில் சரத்குமாருடன் ஒரு பேட்டி நடைபெற்றது. அதில் சூரியவம்சம் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கலகலப்பான நிகழ்ச்சி ஒன்றை குறிப்பிட்டுள்ளார். இன்றும் சொன்ன நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வருபவர் சரத்குமார் என பலரும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம்.

அப்படித்தான் சூரிய வம்சம் படத்தில் தந்தை கெட்டப்புக்கான மேக்கப் எல்லாம் முடித்து அறையில் காத்து கொண்டிருந்தாராம். அசிஸ்டன்ட் இயக்குனர் ஒருவர் ஷாட் ரெடியானதும் கூப்பிடுகிறேன் என்று சொல்லி விட்டு போய்விட்டாராம்.

sooryavamsam
sooryavamsam

சரி, கூப்பிடும்போது போய்க் கொள்ளலாம் என சரத்குமார் தன்னுடைய நண்பர்களுடன் போனில் பேசிக்கொண்டிருந்தாராம். ஆனால் விக்ரமனுக்கு உதவி இயக்குனர் சொன்ன விஷயம் தெரியாது. ராதிகாவிடம் சீன் பற்றி சொல்லிக் கொண்டிருக்கும்போது சரத்குமார் பற்றி புகார் செய்தாராம்.

என்ன ஹீரோ, எப்போ பார்த்தாலும் பெண் தோழியுடன் போனில் அரட்டை அடித்துக் கொண்டு இருக்கிறாரே தவிர படத்தில் கவனம் இல்லை, ஷாட் ரெடி ஆகி இவ்வளவு நேரமாகியும் ஆளை காணவில்லை என ஆச்சா போச்சா என திட்டிப் பேச ஆரம்பித்து விட்டாராம். எதிர்பாராத விதமாக விக்ரமன் பேசிக்கொண்டிருக்கும்போது சரத்குமார் அவரின் பின்னே நின்றதை கவனிக்கவில்லையாம்.

தப்பே செய்யாத தன்னை விக்ரமன் திட்டி விட்டதால் செம கடுப்பில் இருந்தாராம் சரத்குமார். அப்போது தன்னுடைய கோபத்தை காட்டி ஆகவேண்டும் என கேமராமேன் முதல் அசிஸ்டன்ட் டைரக்டர்கள் வரை எரிந்து விழுந்தாராம் சரத். ஒரு கட்டத்தில் கோபம் உச்சிக்கு ஏறி வேட்டியை கழட்டி வீசி விட்டு சென்று விட்டாராம் சரத்குமார். ஆனால் தற்போது வரை எதற்காக வேட்டியை கழற்றி வீசினேன்? என்பதை யோசித்து யோசித்து சிரித்துக் கொண்டே இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -spot_img

Trending News