சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

Mr & Mrs சின்னத்திரையில் ஜெயித்த 5 லட்சத்தை சரத் என்ன செய்தார் தெரியுமா? வைரலாகும் வீடியோ

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் ஜெயித்த 5 லட்சத்தில் தன்னுடைய மனைவிக்கு தங்கம் மற்றும் வைர நகைகளை வாங்கிக் கொடுத்துள்ளார் சரத்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சி மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை வென்றவர் சரத் மற்றும் அவருடைய மனைவி.

இந்த நிகழ்ச்சியில் ஜெயித்த இவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது. இந்தப் பரிசுத் தொகையை வைத்துக் கொண்டு சென்னையில் தங்கம் மற்றும் வைரத்திற்கென மிகப்பெரிய பிரத்தியேக ஷோரூமில் கொண்டுள்ள சரவணா ஸ்டோர்ஸ் எலைட் ஷோரூமில் தன்னுடைய மனைவிக்கு தங்கம் மற்றும் வைர நகைகளை வாங்கிக் கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

இந்தியாவிலேயே வைரத்திற்கென பிரத்தியேகமான மிகப்பெரிய ஷோரூமை கொண்ட நிறுவனம்தான் சரவணா ஸ்டோர்ஸ் எலைட். சென்னையில் தி நகர் மற்றும் தாம்பரம் என இரண்டு இடங்களில் இந்த கடை இயங்கி வருகிறது.

ஏற்கனவே வனிதா விஜயகுமார், ஷாமிலி சுகுமார், தீபா, வினோத், மணிமேகலை, பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா, யூ ட்யூப் பிரபலங்கள் என பல திரையுலக பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்திருந்த நிலையில் தற்போது தாம்பரத்தில் உள்ள ஷோரூமில் சரத் தன்னுடைய மனைவியுடன் உள்ள ஷோ ரூமில் ஷாப்பிங் செய்துள்ளார்.

Trending News