திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

விஜய்யை கடுப்பாக்கிய சரத்குமார்.. கேட்காமல் கொள்ளாமல் தர்ம சங்கடத்திற்கு ஆளாகிய அவலம்

வாரிசு பட வசூல் வேட்டைக்கு பின் தற்போது தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாரிசு படத்தில் விஜய்க்கு அப்பாவாக சரத்குமார் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் கனெக்ட் ஆகாமல் போனது ஒரு நெகட்டிவ் தான். தற்போது விஜய் மற்றும் சரத்து குமாருக்கு இடையே ஒரு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாம்.

மேலும் இந்த படத்தில் விஜய்க்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். இவர் செய்த ஒரு செயலால் விஜய் தர்ம சங்கடத்திற்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டார். சூப்பர் குட் பிலிம்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராக உள்ளவர் தான் ஆர் பி சௌத்ரி. இவர் தயாரிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Also Read: சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்டா மட்டும் போதாது.. ரஜினி எடுத்த துணிச்சலான முடிவு, தயக்கம் காட்டிய விஜய்

இந்நிலையில் தான் தயாரிக்கும் நூறாவது திரைப்படத்தை எப்படியாவது விஜய்யை வைத்து எடுத்து விடலாம் என்ற ஆசையில் இருந்துள்ளார். தனது விருப்பத்தை சரத்குமாரிடம் தெரிவிக்க அவரும் விஜய்யை சந்திப்பதற்கு உதவி செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து வாரிசு படத்தின் ஷூட்டிங் பொழுது விஜய்யிடம் ஒப்புதல் வாங்காமலேயே அவரை சந்திப்பதற்காக சரத்குமார் ஆர் பி சௌவுத்ரியை அழைத்து சென்றுவிட்டார்.

ஏற்கனவே பூவே உனக்காக, ஷாஜகான், துள்ளாத மனமும் துள்ளும் போன்ற படங்கள் விஜய் நடிப்பில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படங்கள் ஆகும். இதனைத் தொடர்ந்து இவரது தயாரிப்பில் விஜய் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த நிறுவனத்திற்கு விஜய் கடைசியாக ஜில்லா படத்தினை நடித்துக் கொடுத்துள்ளார்.

Also Read: விஜய்க்கும் மிஸ்கினுக்கும் ஏற்பட்ட நெருக்கம்.. பெரும் தலைவலியில் லோகேஷ்

மேலும் தனது 100வது படத்தினை தயாரிக்க விஜய்யிடம் தனது ஆசையை தெரிவித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத விஜய் ஆர் பி சௌத்ரியிடம் சுமூகமாக பேசி அவரை அனுப்பி உள்ளார். இதனால் தர்ம சங்கடத்திற்கு ஆளான விஜய் சரத்குமார் மீது உச்சகட்ட கோபத்தில் இருந்துள்ளார். இந்த சம்பவத்தினால் சூட்டிங் ஸ்பாட்டில் சரத்குமார் மீது உள்ள கோபத்தால் சில நாட்கள் இவருடன் பேசாமல் கூட இருந்திருக்கிறாராம். 

இந்த சம்பவத்தினை கேள்விப்பட்டவர்கள் இதுவே பழைய விஜய் ஆக இருந்திருந்தால் நெப்போலியன் போன்று இவரையும் அவமானப்படுத்தி இருப்பார் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்த சம்பவம் அன்றைய சமயத்தில் சினிமா வட்டாரத்தில் பேச்சு பொருளாக மாறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: தளபதி-67 பூஜையில் விஜய்யுடன் போஸ் கொடுத்த அந்த குழந்தை யார் தெரியுமா.? பிரபல காமெடியன் மகளாம்

Trending News