வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சரத்குமார் முதல் மனைவி விவாகரத்து, ராதிகா காரணம் இல்ல.. இந்த நடிகை தானாம்

தமிழ் சினிமாவில் 100 படங்களுக்கும் மேல் ஹீரோவாக நடித்து அதன்பிறகு அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். இவர் முதல் மனைவி சாயா தேவியை விவாகரத்து செய்ததற்கு உண்மையான காரணம் என்ன என்பது தெரியவந்திருக்கிறது.

ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்காக தான் சரத்குமார் சாயா தேவியை கழட்டி விட்டார் என்று பலரும் நினைத்து இருக்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல. ராதிகாவிற்கு மும்பே சரத்குமார் வேறொரு நடிகையை காதலித்திருக்கிறார்.

Also Read: பழுவேட்டரையரை நெற்றி பொட்டில் அடித்தாற்போல் கேட்ட கேள்வி.. ஆவேசத்துடன் பதிலளித்த சரத்குமார்

சரத்குமார் முன்னணி நடிகராக வலம் வந்த அதே சமயத்தில்தான் தமிழ்சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பாட்ஷா மற்றும் பிரபுதேவாவுடன் காதலன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்ததன் மூலம் முன்னணி நடிகையாக நக்மாவும் கோலிவுட்டில் புகழ் பெற்றிருந்தார்.

அப்போது சரத்குமார்-நக்மா இருவரும் காதலித்தார்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ளும் முடிவில் இருந்ததால் தான் சரத்குமார் சாயா தேவியை விவாகரத்தும் செய்தார். ஆனால் அவர்களது காதல் நீடிக்காமல் இருவரும் பிரிந்து விட்டனர்.

Also Read: ஹீரோக்களை விட அதிக சம்பளம் வாங்கிய ஒரே காமெடியன்.. சரத்குமார், பிரபு வாங்கியதை விட அதிகம் வாங்கிய நபர்

அதன்பிறகுதான் ராதிகாவை சரத்குமார் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே சரத்குமாருக்கும் சாயாதேவிக்கும் 2 மகள்கள் உள்ளனர். அதில் ஒருவர் தான் தற்போது சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை வரலட்சுமி மற்றொருவர் பூஜா.

பிறகு இரண்டாவது திருமணத்தில் ராதிகா மற்றும் சரத்குமார் இருவருக்கும் ராகுல் என்ற மகன் இருக்கிறார். ஆகையால் ராதிகாவிற்கு முன்பே சரத்குமார் வாழ்க்கையில் நக்மா வந்ததால்தான் அவரது முதல் மனைவியை சரத்குமார் பிரிய நேர்ந்தது என்ற தகவலை பலரும் ஆச்சரியத்துடன் தெரிந்து கொள்கின்றனர்.

Also Read: தங்கச்சிக்காக காதல் தோல்விக்கு முற்றுப்புள்ளி.. வரலட்சுமி உடம்பை குறைத்ததில் இப்படி ஒரு சங்கதி இருக்கா!

Trending News