வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

Paramporul Movie Review- போலீஸே திருடனா இருந்தா எப்படி?. சரத்குமாரின் பரம்பொருள் திரைவிமர்சனம்

Paramporul Movie Review: சமீபகாலமாக சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை மிரள விட்டு வருகிறார். அந்த வகையில் அசோக்செல்வன், சரத்குமார் நடிப்பில் வெளியான போர் தொழில் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வந்தது. அதிலும் சரத்குமாரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு இருந்தது.

இந்த சூழலில் கவி கிரியேஷன்ஸ் சார்பில் அரவிந்த் ராஜ் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் இன்று வெளியாகி இருக்கும் படம் தான் பரம்பொருள். இதில் சரத்குமார், அமிதாஷ் மற்றும் காஷ்மிரா பர்தேஷி ஆகியோர் நடிப்பில் இந்த படம் உருவாகி இருந்தது. இப்போது இந்த படத்திற்கான விமர்சனத்தை பார்க்கலாம்.

Also Read : ராக்கெட் வேகத்தில் சம்பளத்தை உயர்த்திய 6 நடிகர்கள்.. செகண்ட் இன்னிங்ஸில் கோடியில் புரளும் சரத்குமார்

சமீபகாலமாக சிலை கடத்தலை மையமாக வைத்து தொடர்ந்து நிறைய படங்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் ரஜினியின் ஜெயிலர் படமும் சிலை கடத்தலை வைத்து தான் எடுக்கப்பட்டிருந்தது. அதேபோல் பரம்பொருள் படமும் சிலை கடத்தலை வைத்து தான் எடுக்கப்பட்டதாக இருந்தாலும் இயக்குனர் இதில் வித்தியாசம் காட்டி இருக்கிறார்.

அதாவது உடல்நிலை பிரச்சினை இருக்கும் சகோதரியின் மருத்துவ சிகிச்சைக்கு போதிய வசதி இல்லாத காரணத்தினால் அமிதாஷ் ஆதி என்ற கதாபாத்திரத்தில் சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்து வருகிறார். அப்படிதான் போலீஸ் அதிகாரியாக இருக்கும் சரத்குமாரின் வீட்டில் திருடும்போது கையும் களவுமாக மாட்டிக் கொள்கிறார்.

Also Read : வில்லனா இருந்த உன்ன ஹீரோவா ஆக்கினது தப்பா போச்சு.. இமேஜ் பார்க்கும் சரத்குமார், புலம்பி தவிக்கும் தயாரிப்பாளர்

அப்போது அமிதாஷாவிடம் சரத்குமார் விசாரணை செய்யும்போது சிலை கடத்தல் குற்றவாளி ஒருவரிடம் இவர் வேலை செய்தது தெரிய வருகிறது. போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் மிகச் சீக்கிரம் பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் தான் இந்த படத்தில் சரத்குமார் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் அமிதாஷ் பற்றி தெரிந்தவுடன் ஒரு பழம்பெரும் சிலையை கடத்தி விற்க வேண்டும் என்று சரத்குமார் கூறுகிறார். அதற்கு ஆரம்பத்தில் அமிதாஷ் மறுத்தாலும் குடும்ப சூழ்நிலை மற்றும் சரத்குமார் கட்டாயத்தின் பேரில் இதை செய்ய முயற்சிக்கிறார். கடைசியில் அந்த சிலையை எப்படி கடத்துகிறார்கள், அதை விட்டார்களா என்பது தான் படத்தின் கதை.

Also Read : விஜய்க்கு ஜால்ரா தட்டிய சரத்குமார்.. மேடையிலேயே நோஸ்கட் கொடுத்த சத்யராஜ்

மேலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் யாரும் எதிர்பார்க்காத விஷயத்தை இயக்குனர் வைத்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. ஆனால் போர் தொழில் அளவுக்கு சரத்குமாருக்கு பரம்பொருள் அமையுமா என்பது சந்தேகம் தான். ஆனாலும் தனக்கு கொடுத்திருக்கும் கதாபாத்திரத்தை கனகச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்.

சினிமாபேட்டை ரேட்டிங்: 2.25/5

Trending News